நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா மந்தனா.. மரண பயம் குறித்து கதறல் பேச்சு..

நேஷனல் கிரஷ் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரராக மாறி இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில், விஜய தேவர கொண்டா ரெட்டிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ராஷ்மிகா மந்தனா

அல்லு அர்ஜூனாவுடன் புஷ்பா, விஜயுடன் வாரிசு, கார்த்தியுடன் சுல்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ராஷ்மிகா மந்தனா பிரபலமானார்.

இப்போது இந்தியில் ரன்வீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற படத்தில் நடித்து, பாலிவுட் படவுலகிலும் பிரபலமாகி விட்டார் ராஷ்மிகா மந்தனா.

விமான பயணம்

இந்நிலையில், டாடா குழுமத்துக்கு சொந்தமான விஸ்டாரா விமானம் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளும், 10க்கும் மேற்பட்ட விமான பணிப்பெண்களும் இருந்தனர்.

மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், வானில் பறக்க துவங்கிய 30 நிமிடங்களில் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

பல ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்த நிலையில், இந்த இயந்தி கோளாறு ஏற்பட்டுள்ளதாக, விமானத்துக்குள் அமர்ந்திருந்த பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

பயணிகள் அதிர்ச்சி

இதைக்கேட்டு விமானத்தில் பயணித்த பயணிகள் பயங்கர அதிர்ச்சியடைந்தனர். இந்த விமானத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும், அவருடன் நடிகை ஷ்ரத்தா தாஸ்சும் இருந்துள்ளனர்.

விமானத்தில் இயந்திரக் கோளாறு தகவலை அறிந்த ராஷ்மிகா மந்தனா பீதியில் உறைந்துவிட்டார்.

பத்திரமாக…

இனி தொடர்ந்து பயணிக்க முடியாது என்ற நிலையில், விமான கேப்டன் உடனடியாக விமானத்தை மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.

விமானத்தின் இயந்திர கோளாறு சரியாக அதிக நேரமாகும் என்பதால் மாற்று விமானத்தில் அந்த பயணிகள் அனைவரும் ஏற்றப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர்.

தப்பித்தோம்…

விமான பயணத்தில் தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை, இப்படித்தான் மரணத்தில் இருந்து தப்பித்தோம்’ என ராஷ்மிகா மந்தனா தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ந்து போன அவரது ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா மந்தனா, தனது மரண பயம் குறித்து கதறலாக வெளியிட்ட பதிவு, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.