அருண் விஜய் அம்மாவால் தான் நான் இதை கத்துகிட்டேன்.. இதை சொல்றதுக்கு எனக்கு கூச்சமில்ல.. வனிதா ஓப்பன் டாக்..

நடிகை வனிதா விஜயகுமார், பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவரது தந்தை நடிகர் விஜயகுமார். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து, இப்போது வரை நடித்துக்கொண்டு இருக்கும் சீனியர் நடிகர்.

வனிதா விஜயகுமார்

விஜயகுமாரின் 2வது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள்தான் வனிதா. ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற மகள்கள் உள்ளனர். இதில் ப்ரீத்தா, இயக்குநர் ஹரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதேவி தேவதையை கண்டேன், பிரியமான தோழி போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.

விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு. இவருக்கு கவிதா, அனிதா, நடிகர் அருண்விஜய் என்ற 3 பிள்ளைகள் உள்ளனர்.

வனிதா விஜயகுமார், துவக்கத்தில் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின் நடிப்பில் அவர் பெரிய அளவில் பேசப்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான், இவர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதி மகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

குக் வித் கோமாளி

அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வனிதா விஜயகுமார், தொடர்ந்து சில காமெடி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்துக்கொண்டார்.

கடந்தமுறை நடந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இவரது மகள் ஜோவிகா, பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்றார்.

இதையும் படியுங்கள்:  நான் செய்தி வாசிக்கும் போதே… அவருடைய மரணம்.. அடுத்த நிமிஷமே இதை எடுத்து வச்சேன்.. நிர்மலா பெரியசாமி..

அப்போது தினமும் யூடியூப்பில் வந்து ரிவ்யூ தந்துக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களை கண்டபடி வசைபாடினார்.

கன்னத்தில் காயத்துடன்

அப்போது நள்ளிரவில் ஒரு நபர் முகத்தில் குத்திவிட்டு ஓடியதாக கூறி, கன்னத்தில் காயத்துடன் வீங்கிய முகத்துடன் புகைப்படங்களை பதிவிட, அது பயங்கர வைரலானது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அநீதி உள்ளிட்ட சில படங்களில் வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். இப்போது துணிக்கடை, அலங்கார பொருட்கள் விற்பனை, யூடியூப் சேனல் நேர்காணல் என பிஸியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் கூறியதாவது, எங்க அம்மா (மஞ்சுளா) சரியாக சமைக்க மாட்டாங்க. அப்போ அவங்க ரொம்ப பிஸியா படங்களில் நடிச்சிட்டு இருந்தாங்க.

சமைக்க கத்துக் கொடுத்தது

அப்போ எங்களுக்கு விதவிதமா சமைக்க கத்துக்கொடுத்தது அருண்விஜய் அண்ணனோட அம்மா, எங்க பெரியம்மா தான். பெரியம்மா ரொம்ப அருமையா சமைப்பாங்க. அவங்க சமையல் பிரமாதமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:  பிரீத்தா ஸ்ரீதேவி நெனச்சாலும் வனிதா கூட சேர முடியாது.. அதிர்ச்சி காரணம்..

எனக்கு அவங்க சமையல் செய்வதை பார்த்துதான் சமைக்கிற ஆர்வமே வந்தது. அப்புறம்தான் நான் சமைக்கவே கத்துக்க ஆரம்பிச்சேன். இருந்தாலும் அவங்க சாப்பாடு தான் நல்லா இருக்கும்

எங்க அம்மா எப்போதாவது சில நேரங்களில் சில சாப்பாடு செஞ்சிருக்காங்க, என்று கூறியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

இந்த நேர்காணலில், அருண் விஜய் அம்மாவால் தான் நான் சமைக்க கத்துகிட்டேன்.. இதை சொல்றதுக்கு எனக்கு கூச்சமில்ல என்று வனிதா ஓப்பனாக பேசியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.