தமிழ் சினிமாவே உதயநிதி கட்டுப்பட்டுல தான் இருக்கு.. மன்சூர் அலிகான் வேதனை…

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரான மன்சூர் அலிகான் எதிர் நாயகனாகவும், துணைக் கதாப்பாத்திரமாகவும் பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: பிரபல நடிகரின் மகன் கடத்தல்.. பார்க்கிங் பட பாணியில் அரங்கேறிய விபரீதம்..

நடிகை ரோஜாவின் கணவர் ஆர். கே. செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் (1991) திரைப்படத்தில் நடித்தன் மூலம் பிரபலம் ஆனார்.

இதனிடையே அரசியலிலும் ஈடுபட்டார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்த அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.

மேலும் நடிகை த்ரிஷா குறித்து பேசிய அவரின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு திரிஷா, குஷ்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: நான் இந்த ஆணுறை யூஸ் பண்றேன்.. டென்ஷன் ஆன ஃபாத்திமா பாபு கொடுத்த செருப்படி பதில்…

பின்னர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதன் மூலம் சர்ச்சை முடிவுக்கு வந்தது. தற்போது மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியாகி உள்ள ‘சரக்கு’ திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

காரணம் மது பாட்டிலில் வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப்பட்டை இருக்கும் படத்தை அகற்ற சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பானது.

இதையும் படியுங்கள்: “உடம்பில் பொட்டு துணி இல்லாம நான் இருந்த விஷயத்தை அவங்ககிட்ட சொன்னாரு..” காதல் கணவன் குறித்து சம்யுக்தா விளாசல்..!

இதுகுறித்து கூறியுள்ள மன்சூர் இந்த படத்திற்காக நான்கு கோடி ரூபாய் செலவழித்ததாகவும் ஆனால் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் இந்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க முடியவில்லை என்றார்.

இதற்கு காரணம் உதயநிதி தான் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, தன்னுடைய சரக்கு படத்திற்காக 4 கோடி ரூபாய் தான் செலவிட்டதாகவும் உதயநிதியால் தனக்கு 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.