நடிகர் வினீத் குடும்பம் மனைவியை பார்த்துள்ளீர்களா..? லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

90ஸ் காலகட்டங்களில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் வினித். இவர் 90ஸ் காலகட்டங்களில்…

பல்வேறு சூப்பர் ஹிட் படங்களின் நடித்து ஒட்டுமத் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டு வைத்திருந்தார்.

குறிப்பாக தெனிந்த மொழி படங்களில் அதிகம் நடித்திருக்கும் இவர் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களில் 60க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

நடிகர் வினீத்:

அந்த காலத்தில் தொடர்ச்சியாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவரது நடிப்பும் இவரது தோற்றமும் பார்க்கும் எல்லோருக்கும் மிகவும் பிடித்து தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார்.

இதையும் படியுங்கள்: கசப்பான அனுபவம் குறித்து வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

இவருக்கு நடிப்பு திறமையும் தாண்டி மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர் என்றது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று.

குறிப்பாக இவர் சந்திரமுகி திரைப்படத்தில் நடனமாடிய அந்த நடனம் இன்று வரை யாராலும் மறக்கவே முடியாது.

அது மட்டும் இல்லாமல் காதல் தேசம், பிரியமான தோழி, தேவதை, உளியின் ஓசை, கட்டபொம்மன், ஆவாரம் பூ, காதல் கிறுக்கன் இப்படி தமிழில் பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இதில் காதல் தேசம் பிரியமான தோழி சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது நடிப்பு இன்று வரை நம்மில் யாராலும் மறக்கவே முடியாது.

அந்த அளவுக்கு ரசிகர்களிடம் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தான் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.

சிறந்த நடிகருக்காக இவர் இரண்டு கேரளா அரசு விருதுகளையும் தமிழில் கலைமாமணி என்ற உயரிய விருதையும் வாங்கி இருக்கிறார்.

இவர் மிகவும் ஃபேமஸானது என்னமோ சந்திரமுகி திரைப்படம் ஆக இருக்கலாம். ஆனால், அறிமுகமானது ஆவாரம்பூ என்கிற திரைப்படம் தான்.

அந்த முதல் படத்திலேயே இவரது நடிப்பை பார்த்து வியந்த தயாரிப்பு சங்கம் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை கொடுத்து அவரை கௌரவித்துள்ளது.

லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் வைரல்:

ஆனால் தற்போதும் இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் தனது பரதநாட்டிய நடனத்தையும் தனது மாணவர்களின் பரதநாட்டிய நடன கலைகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: எனக்கு புகைப்பிடிக்க கத்து குடுத்ததே இவரு தான்.. வெக்கமின்றி கூறிய நடிகை மீரா கிருஷ்ணன்..!

இதனுடைய வினீத் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரசில்லா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில்தான் நடிகர் வினித் தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட அது தற்போது தீயால் பரவி வருகிறது.

இதை அடுத்து அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நீங்கள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும்.

உங்களது நடிப்பும் உங்களது திறமையும் தொடர்ந்து திரைப்படங்களில் வெளிப்பட வேண்டும் என தங்கள் கோரிக்கையை தெரிவித்து வருகிறார்கள்.