செத்தவன் வாயில வெத்தல வச்ச மாதிரி இருக்கான்.. தீனா பாடல் குறித்து வாலி சொன்னதை கேட்டீங்களா..?

பொக்கிஷ படைப்பாளி ஆன கவிஞர் வாலி தமிழில் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி மிகச் சிறந்த பாடல் கவிஞர், மிகச்சிறந்த பாடல் ஆசிரியராக பார்க்கப்பட்டு வந்தார்.

சிவாஜி, எம்ஜிஆர் காலகட்டம் துவங்கி ரஜினி கமல் என ஆரம்பித்து பின்னர் விஜய், அஜித், சூர்யா என மூன்று தலைமுறைகளுக்கு பாடல் எழுதி பெரும் புகழ் பெற்ற கவிஞராக பார்க்கப்பட்டு வருகிறார்.

கவிஞர் வாலி:

இதுவரை கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதோடு ஒரு சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் வாலி.

சத்யா, ஹேராம் ,பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட சில திரைப்படங்கள் அதில் குறிப்பிடத்தக்கவை.

இதனிடையே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று கௌரவிக்கப்பட்ட கவிஞராக பார்க்கப்பட்டார்.

பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வாலி 1950களில் திரைப்படங்களில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்.

எம்ஜிஆர் – சிவாஜிக்கு பெருமை சேர்த்த பாடல்கள்:

எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்திலேயே இவரது திரைப்பயணம் துவங்கியது. எம்ஜிஆர் காக மட்டும் கிட்டத்தட்ட 63 திரைப்படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக 70 படங்களுக்கு இவர் பாடல் எழுதி இருக்கிறார். குறிப்பாக அவர்களது படங்களில் இவரது பாடல்கள் இல்லாமல் இருக்காது என்று சொல்லும் அளவிற்கு சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு வாலி வழக்கமாக பாடல் எழுதி வந்தார்.

இதனிடையே கடந்த இரண்டு 1954 ஆம் ஆண்டு இவர் ரமணி திலகம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இவர்களுக்கு பாலாஜி என்ற ஒரு மகன் இருக்கிறார்.

மனைவி ரமணி திலகம் கடந்த 2009 ஆம் ஆண்டு மரணித்து விட்டார். வாலி கடந்த 2013 ஆம் ஆண்டு மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மரணித்துவிட்டார்.

அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானது குறிப்பிடத்தக்கது.

உலகை விட்டு மறைந்தாலும் இவரது பாடல்கள் மூலமாக பல நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் என்பது நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் கவிஞர் வாலி பேட்டி ஒன்றில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் குறித்து பேசிய தகவல் ஒன்று தற்ப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஏ. ஆர் முருகதாஸை திட்டிய கவிஞர் வாலி:

அதாவது, கவிஞர் வாலி அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது தீனா படத்தின் இயக்குனர் முருகதாஸ் என்னை பார்க்க வந்தார்.

ஒரு படத்திற்காக பாடல் கேட்டிருந்தார். வந்து என்னுடைய அலுவலகத்தில் அமர்ந்தார். நான் அந்த வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடலை பாடி காட்டினேன். எதுவும் பேசாமல் சிலை போல உட்கார்ந்திருந்தார்.

எனக்கு கோபம் வந்துவிட்டது. இதற்கு தான் புது முக இயக்குனர்களுக்கு பாட்டு எழுதிக் கொடுப்பதில்லை பிடித்திருக்கிறது என்றால் பிடித்திருக்கிறது என்று கூறுங்கள்.

பிடிக்கவில்லை என்றால் நான் மாற்றி எழுதி தருகிறேன் இப்படி செத்தவன் வாயா வெத்தலை வைத்த மாதிரி இருக்கீங்களே ஏதாவது சொல்லுங்க என்று முருகதாஸை திட்டினேன்.

அப்போதுதான் அவர் சித்தமும் தெரிந்த ஒரு போல பேசினார். இல்ல சார் இந்த படத்துல ஹீரோ படம் முழுக்க வாயில் வத்திக்குச்சியை வைத்துக் கொண்டுதான் வருவார்.

அப்படித்தான் நான் கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்த விஷயத்தை நான் உங்களிடம் சொல்லவே இல்லை.

ஆனால் நீங்கள் வத்திக்குச்சி பத்திக்காதுடா என எழுதி இருக்கிறார்களே அதை யோசித்துக் கொண்டிருந்தேன்.

வேறொன்றும் இல்லை என கூறினார் முருகதாஸ் என கவிஞர் வாலி தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.