இந்த ஜாக்கெட் போட்டா தான் எடுப்பா இருக்கும்.. சாய் பல்லவி கலெக்ஷனை பாருங்க..!

இந்திய பெண்களின் நேர்த்தியான உடையாக பல ஆயிரம் ஆண்டுகளாக இடத்தை பிடித்திருப்பது “சேலை” தான். “சேலை” என்றாலே பிடிக்காத பெண்கள் இருக்கவே முடியாது.

குழந்தைகள் முதல் டீனேஜ் வயசு பெண்கள், வயசான முதியவர்கள் வரை சேலை அணிந்தாலே மிகவும் சௌகரியமாக இருக்கும் என உணர்வார்கள்.

பெண்களும் – சேலையும்:

எங்கு எந்த விழாக்களுக்கு சென்றாலும் அந்த உடையை அணிந்து செல்லலாம். காட்டன் சேலை, கல்யாண சேலை,பூனம் சேலை, பட்டு சேலை, இப்படி கல்யாணம், ஆஃபீஸ் , வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சேலையை அணிந்து செல்லலாம்.

அந்த வகையில் சேலையை பிடிக்காத பெண்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ் பெண்கள் இருக்கிறார்கள்.

அதிலும் நடிகை என்று எடுத்துக் கொண்டால் சாய் பல்லவிக்கும் சேலைக்கும் மிகவும் மிகப்பெரிய ஒரு கனெக்ஷன் இருக்கிறது என்று சொல்லலாம்.

சாய்பல்லவி எந்த விழாக்களுக்கு சென்றாலும் பொதுவாக சேலை அணிந்து தான் செல்வார். அது குறித்து அவர் விளக்கமும் சமீபத்திய பேட்டிகளில் ஒன்றில் கூட தெரிவித்தார்.

அதாவது, நான் மற்ற உடைகளை அணியும்போது என் உடை எங்கேயும் விலகி இருக்கிறதா? யாரேனும் தவறாக பார்க்கிறார்களா? என்று எண்ணத்திலே என்னுடைய கவனம் சென்று விடும்.

அதனால் மற்ற காரியங்களில் என்னால் கவனத்தை செலுத்தவே முடியாது. அந்த ஒரு காரணத்துக்காக தான் நான் எங்கு சென்றாலும் சேலை அணிந்து செல்கிறேன்.

சாய்பல்லவிக்கு பாதுகாப்பை தரும் சேலை:

அது எனக்கு மிகவும் சௌகரியமாகவும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக நான் உணர்கிறேன் என அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

அவரின் கருத்து பல பெண்களின் மனதில் இருக்கும் விஷயத்தை கூறியதைப் போல் சாய் பல்லவியை பலரும் பாராட்டினார்கள்.

அவ்வளவு ஏன் அவர் நடிகையாக அறிமுகமான முதல் படமான பிரேமம் திரைப்படத்தில் பெரும்பாலும் சேலை அணிந்து வந்து தான் பெரும்பாலான காட்சிகளின் நடித்த அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

அதிலும் சிம்பிளான சேலை அணிந்து வந்து இளைஞர்களை மனதில் பிரேமம் டீச்சராக பச்சை குத்திவிட்டார் இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து விட்டார்.

என்னதான் மிகப்பெரிய நடிகையாக மார்க்கெட் பிடித்து நட்சத்திர அந்தஸ்தை பிடித்து விட்டாலும் நடிகை சாய் பல்லவிஇ உடையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

இன்றும் எந்த ஒரு விருது விழாக்கள், நிகழ்ச்சிகள், பேட்டிகள், நேர்காணல் என எங்கு சென்றாலும் அவர் சேலையை அணிந்து செல்கிறார்.

அந்த வகையில் அவர் அணிந்து செல்லும் சேலையும் அதற்கு ஏற்ற பிளவுஸ் கலெக்ஷனும் குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Full sleeve blouse:

பட்டு சேலைக்கு ஏற்ற லாங் ஸ்லீவ் ஜாக்கெட். கருப்பு நிறத்தில் இந்த லாங் ஸ்லீவ் ஜாக்கெட் அணிந்து பட்டு சேலையில் தகவென ஜொலிகிறது. இது போன்ற ஜாக்கெட் கல்யாணம். பிரம்மாண்ட விருது விழாக்களுக்கு அணிந்து செல்லலாம்.

Elbow length round neck:

முழங்கை அளவிற்கு வெட்டப்பட்ட பிளவுஸ் பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாக எந்த ஒரு டிசைனும் இல்லாமல் உடல் ஷேப்பிற்கு ஏற்றவாறு கச்சிதமாக பொருந்தும். இது போன்ற சில பிளவுஸ்களை நீங்கள் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் அணிந்து செல்லலாம்.

Sleeveless strappy blouse:

பொதுவாக ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் ஹெவி டிசைன் கொண்ட சேலைகளுக்கு அழகாக இருக்கும். இது போன்ற ஜாக்கெட்டை, பிறந்தநாள் பார்ட்டி , நைட் பாடி, நண்பர்களுடன் get together உள்ளிட்டவற்றிற்கு அணிந்து செல்ல ஏதுவாக இருக்கும்.

Boat neck grace: Sleeveless:

கழுத்து முழுவதும் கவர் செய்து இருக்கும் இந்த Boat neck grace பிளவுஸ் அன்றாட ஆபீஸ் உடைகளுக்கு பயன்படுத்தலாம். மிகவும் டீசண்டாக நேர்த்தியாக இருக்கும்.

Short sleeve blouse:

இதுபோன்ற ஜாக்கெட் House wifeகளுக்கு பக்காவாக இருக்கும். தினமும் சேலை அணிபவர்களுக்கு இதுபோன்ற பிளவுஸ் சௌகர்யமாக இருக்கும்.