மதுரை முத்து வாங்கிய புதிய கார்..! விலை மட்டும் இத்தனை லட்சமா..?

வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும், தனது திறமையை வெளிப்படுத்தினால் எப்படியாவது வாழ்க்கையில் சாதித்து முன்னுக்கு வரலாம் என்பதற்கு பல பேரை உதாரணமாக சொல்லலாம்.

வறுமையும், தடைகளும், வாழ்க்கையில் சிக்கல்களும், நெருக்கடியும், போராட்டங்களும் நிறைய இருந்தாலும், அதையும் தாண்டி தன் மீது தளராத நம்பிக்கையும், அசைக்க முடியாத ஒரு உறுதியும் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் சாதிக்க முடியும், உயர்ந்த இடத்துக்கு வர முடியும் என்பதை பலரும் நிகழ்த்தி காட்டி வெற்றியாளர்களாக இந்த சமுதாயத்தில் வளர்ந்து, வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மதுரை முத்து

அந்த வகையில் நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான ஒருவராக இருந்து வருகிறார். அவர் டிவி சேனல் ரியாலிடி நிகழ்ச்சிகளில், தொடர்ந்து கலந்து கொள்கிறார்.

அது மட்டும் இன்றி திருமண நிகழ்வுகள், கோவில் விசேஷங்கள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துக்கொண்டு பேசுகிறார். அவர் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கால கட்டங்களில் நடக்கிறது.

அது தவிர பள்ள, கல்லூரி நிகழ்ச்சிகள், பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் மதுரை முத்து, தனது நகைச்சுவை பேச்சால் பார்வையாளர்கள் வெகுவாக கவருகிறார்.

அவர் ஒரு மணி நேரம் பேசினார் என்றால், அதில் இப்படியும் ஒரு 25 முதல் 30 முறையாவது பார்வையாளர்களை தனது காமெடி பேச்சாளர் சிரிக்க வைத்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர் பட்டாளம்

அதனால் மதுரை முத்து பேசும் காமெடியை ரசிக்க, தமிழ்நாட்டில் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே அவருக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடு வாழ் தமிழர்களும் அவரை தங்களது நாடுகளுக்கு வரவழைத்து அவரை பேச வைத்து ரசிக்கின்றனர்.

வெறும் காமெடியாக மட்டும் அவர் பேசாமல், பலதரப்பட்ட விஷயங்களை வாழ்க்கை தத்துவங்களை, மனிதனுடைய உணர்வுகளை, சமுதாய சிந்தனைகளை அவ்வப்போது தனது பேச்சுக்கு நடுவே எடுத்து விடுகிறார்.

சிந்தனை கருத்துகள்

சிறந்த சிந்தனை மிக்க கருத்துக்களையும் அவர் வெளிப்படுத்தி விடுவார். அதுவும் அவரது பேச்சை பெரும்பாலானவர்கள் ரசிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இப்போது விஜய் டிவியில், சன் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களில் மதுரை முத்து கலந்து கொண்டு வருகிறார்.

அசத்தப் போவது யாரு?

சின்னத்திரை பிரபலம் என்ற வகையில் ரசிகர் மத்தியில் எப்போதுமே மதுரை முத்துவுக்கு தனி மவுசு உண்டு. கலக்கப்போவது யாரு, அசத்தப் போவது யாரு போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பவர் தான் மதுரை முத்து.

ஸ்டாண்ட் அப் காமெடி செய்வதில் வல்லவரான இவர், இப்போது அப்கிரேட் செய்து புதிய புதிய தகவல்களை தனது காமெடியில் மூலம் மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறார்.

புதிய கார்

இந்த நிலையில் மதுரை முத்து இன்னோவா ஜெட்எக்ஸ் ஹைபிரைட் என்ற காரை வாங்கி இருக்கிறார். அதன் விலை மட்டும் 34.48 லட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது 34 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் அந்த காரின் விலை இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் பதிவு

அந்த புதிய சொகுசு காருடன் அவர் நிற்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது. அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், உங்கள் அன்பில் ஆதரவில் இல்லத்திற்கு வந்த புது தோழன் வருக என்று அந்த காரை குறிப்பிட்டிருக்கிறார்.

புதிய தோழன்

அதாவது ரசிகர்களை பெருமைப்படுத்தி குறிப்பிட்டு, தன் வீட்டுக்கு வந்த புதிய தோழன் என்று தனது புதிய காரை மதுரைமுத்து கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை முத்து வாங்கிய புதிய கார், விலை மட்டும் 38.48 லட்சமா என்று கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.