பிச்சைக்காரன் படத்தில் பண மதிப்பிழப்பு குறித்து பேசி நாட்டை அதிர வைத்த நடிகர் கோவிந்தசாமி நிஜத்தில் யார் தெரியுமா..?

பிச்சைக்காரன் என்ற திரைப்படம் 2016-இல் வெளி வந்த தமிழ் திரைப்படம். இந்த அதிரடி திரைப்படத்தை சசி இயக்கி இருக்கிறார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தயாபரன் உதவி இயக்குனராக விளங்குகிறார்.

ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்த ஒரு காட்சி நிஜமாக நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

பிச்சைக்காரன் திரைப்படம்..

இந்தியாவில் நிகழ்ந்த பண மதிப்பிழப்பு நிகழ்வை பற்றி நடக்காத போதே எந்த திரைப்படத்தில் ஒரு பிச்சைக்காரன் எப்எம் ரேடியோவிற்கு ஃபோன் செய்து பேசிய போது இவர் ஒரு மிகச்சிறந்த பொருளாதார நிபுணராக இருப்பார் என்று கூறினார்கள்.

இப்படி கோவில் வாசலில் இன்று அமர்ந்தபடி பிச்சை எடுத்த அந்த நடிகர் யார் என தெரியுமா? அவர் தான் கோவிந்தசாமி. இவரைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். எனினும் நிஜ வாழ்க்கையில் இவர் யார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று அது பற்றி இந்த பதிவில் படிக்கலாம்.

இவர் தான் கருப்புசாமி குத்தகைக்காரர், வெடிகுண்டு முருகேசன் மற்றும் பப்பாளி போன்ற படங்களை எடுத்த இயக்குனர் ஆவார். ராஜபாளையத்தை சேர்ந்த இவர் 1992- இல் சென்னை வந்ததாக கூறியிருக்கிறார்.

பண மதிப்பிழப்பு..

சென்னையில் வேலை கிடைத்திருப்பதாக பொய் சொல்லி தான் ராஜபாளையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த இவர் உதவி இயக்குனராக இருந்த போதே விஜய் சாருக்கு ஒரு கதை ரெடி செய்தார்.

இந்தப் படத்திற்கு பரட்டை என்ற பெயரையும் வைத்திருந்தார். எனினும் விஜய் இடம் எந்த கதையை சொல்ல முடியாத காரணத்தால் நடிகர் கரணை வைத்து படம் செய்ய கதை கேட்டு வருவதாக தெரிய வந்த நிலையில் கடலை என்ற பெயரில் அவர்களிடம் கதையை சொன்னேன்.

இன்னும் கதை சரியாக வரவில்லை இதனை எடுத்து என் நண்பர்களிடம் கடனுக்காக கதை கேட்டேன். அவர்களும் உங்களிடம் ஏற்கனவே ஒரு கதை உள்ளது என்று சொல்ல அது விஜய்க்காக எழுதியதை கரணுக்கு செட்டாகாது என்று சொன்னதை அடுத்து மீண்டும் அந்த நண்பர்கள் அந்த கதையை சற்று மாற்றி கரணுக்கு தக்கபடி எழுத வைத்தார்கள். இது ஓகே ஆனது.

சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் படத்திலும் நான் உதவி இயக்குனராக நடித்திருக்கிறேன் என்று நடிகர் கோவிந்தசாமி சொல்லி இருக்கிறார். இதனை அடுத்து வடிவேலுவிடம் படித்துறை பாண்டி என்ற ஒரு கதையை எழுதி கூறினேன் இது வடிவேலுக்கு மிகவும் பிடித்திருந்தது.

பேசிய நடிகர் நிஜத்தில் யார்..

இதனை அடுத்து கருப்புசாமி குத்தகைக்காரர் படத்தில் வேலைகள் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்தது. இந்த படத்திலும் நடிகர் வடிவேலு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தான் பிச்சைக்காரன் படத்தில் அந்த பிச்சைக்கார வேடத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்து. அந்த படத்தில் நடித்த போது கிடைத்த ரெஸ்பான்ஸ் விட நாட்டில் பண மதிப்பீடு நடந்த சமயத்தில் எனக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

இதனை அடுத்து பலவிதமான போன் கால்கள் வந்ததை அடுத்து மேலும் பல படங்களில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இதற்கு காரணம் தான் நடித்த ஒரு சீனுக்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் என்றால் என்னால் அதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இதனை அடுத்து இயக்குவதை விட நடிப்பதினால் எவ்வளவு பெயர் கிடைக்கிறது என்பதை அறிந்து கொண்ட நான் வாழ்க்கையில் நாம் என்ன ஆகிறோம் என்பதைவிட என்னை என்னவாக மாற்றி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் வாழ்க்கை வளமாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.