சவுக்கு வெளியில் வந்தா என்ன ஆபத்து..? 100 கோடி சொத்து.. பெண் தொடர்பு.. ஆதாரம் இருக்கு.. விளாசும் பிரபலம்..!

பிரபல சச்சைக்குரிய அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் காவலர்களை அவதூறாக பேசி பெண் காவலர்கள் காவலாளர்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

இந்த விஷயம் பெரும் பூதாகரமாக வெடித்ததை அடுத்து காவலர்களை இழிவு படுத்தி பேசுவதாக சவுக்கு சங்கருக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

பெண் காவலர்களை இழுவுபடுத்திய சவுக்கு:

இப்படியான நேரத்தில் சவுக்கு சங்கர் கடந்த 4ம் தேதி அடியாக கைது செய்யப்பட்டார். அது மட்டும் இல்லாமல் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சவுக்கு சர்க்கரை தொடர்ந்து அவரது அரசியல் சார்ந்த விமர்சனங்களையும் பேட்டிகளையும் ஒளிபரப்பி youtube சேனல்களில் வெளியிட்டு வந்த எடிட்டரான பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரும் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சவுக்கு சங்கரின் கைது விவகாரம் நாளுக்கு நாள் திடீர் திருப்பங்களையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

தேனியில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்யபோது அங்கு காவல்துறையினரை மிரட்டி தகாத வார்த்தைகளால் சவுக்கு சங்கர் திட்டியதாக கூறப்படுகிறது.

அந்த தருணத்தில் அவர் கைது செய்யும் போது போலீஸ்காரர்களுக்கு ஒத்துழைக்காத காரணத்தால் அவரை அங்கிருந்து அடித்து இழுத்து சென்றது பெரும் பரபரப்பு கிளப்பியது.

சவுக்கு ஷங்கர் அறையில் கஞ்சா பறிமுதல்:

அது மட்டும் இன்றி சவுக்கு சங்கர் தங்கி இருந்த அறையை பரிசோதித்து பார்த்தபோது அங்கிருந்து கஞ்சா மற்றும் கட்டு கட்டான பணம் போன்றவற்றை கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

ஆளுங்கக்கட்சிக்கு எதிராக அதிரடியான பல விமர்சனங்களை தொடர்ச்சியாக கூறி வந்த சவுக்கு சங்கர். கைது செய்யப்பட்டு இருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுக்கு சங்கர் தனக்கு சிறையில் உயிருக்கு ஆபத்து இருப்பதாக முழக்கம் போட்டு இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் அவரது கையில் மாவு கட்டு போடப்பட்டு அழைத்து செல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

மத்திய குற்ற பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சவுக்கு சங்கரிக்கு எதிராக ஏழு வழக்குகள் உள்ளது.

மூன்று வழக்குகள் விசாரணையிலும் இரண்டு வழக்குகள் குற்ற பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள இரண்டு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு சிறையில் பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார்.

சிறையில் தாக்கப்பட்ட சவுக்கு:

மேலும் பத்து நாட்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கினார்கள் என்றும் என்னை மோசமாக அடிக்கிறார்கள் என்றும் விசாரணையில் கூறினார் சவுக்கு சங்கர்.

இப்படியான நேரத்தில் பிரபல பத்திரிக்கையாளரான என தமிழா தமிழா பாண்டியன் சவுக்கு சங்கரை குறித்து பக்கீர் கிளப்பும் விஷயங்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் கூறியதாவது.

சவுக்கு சங்கர் வெளியே வந்தால் அவருக்கு என்ன ஆபத்து இருக்கிறது? அவருக்கு எப்படி 100 கோடி ரூபாய் சொத்து சேர்ந்தது?

சென்னையின் மிக முக்கியமான இடங்களில் வீடுகள் இடமாகவும் நிலமாகவும் வாங்கி போட்டு இருக்கிறார் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது.

இவை அனைத்திற்கும் ஆதாரமும் இருக்கிறது. ஒரு பத்திரிக்கையாளருக்கு எப்படி கோடிக்கணக்கில் சொத்து சேர முடியும்?

ரூ.100 கோடி சொத்து… பெண் தொடர்பு:

யாரை மிரட்டி இவர் பணம் வாங்கினார்? அவர் யாருக்கு ஆதரவாக பேசுவதற்காக இவர் கோடி கணக்கில் பணம் வாங்கினார் என்பதெல்லாம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என பிரபல பத்திரிக்கையாளர் தமிழக பாண்டியன் சமீபத்திய பேட்டி ஒன்றியங்களில் சவுக்கு சங்கரரின் கைது குறித்து விளாசி இருக்கிறார்.

மேலும் அவருடைய கை உடைய பட்டு இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் அவருடைய ஒத்துழையாமை தான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொழுது நான் வரமாட்டேன் என்று அடம் பிடித்து இருக்கிறார் சவுக்கு சங்கர்.

அப்போது கையை பிடித்து இழுக்கும்போது அவருக்கு ஏற்பட்ட சிறு காயத்தை தான் அவர் காயமே…கையை முறித்துவிட்டார்கள் உயிர் ஆபத்து இருக்கிறது என கூறிக் கொண்டிருக்கிறார்.

அவர் சொல்வது போல ஜெயிலில் இருப்பவர்கள் தாக்கி இருந்தால் இந்நேரம் சவுக்கு சங்கரின் கை தூள்தூளாக போயிருக்கும்.

அவர் நீதிமன்றத்திற்கு வர மாட்டேன் என முரண்டு பிடிக்க போய் அவரை வலுக்கட்டாயமாக எழுதி வந்த போது ஏற்பட்ட காயத்தை அவர் இப்படி கூறிக் கொண்டிருக்கிறார் என அடுக்கடுக்கான பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.