உடல் ரீதியாக தொல்லை.. உச்ச கட்டமாக.. விவாகரத்து குறித்து போட்டு உடைத்த VJ மகேஸ்வரி..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக விஜே மகேஸ்வரி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமாகினார்.

குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது அவர் அவ்வளவாக பேசப்படவில்லை. தொடர்ந்து சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தபோதுதான் அவர் மிக குறுகிய காலத்தில் பிரபலமான தொகுப்பாளினியாக பேசப்பட்டார்.

விஜே மகேஸ்வரி:

இதுவரை விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

விஜே மகேஸ்வரி இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வந்தார்.

இதனிடையே கணவரின் தொல்லையாலும் அவர் கொடுத்த டார்ச்சராலும் ஒரு மகன் பிறந்த பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டார்.

தற்போது சிங்கிள் மதராக தனது மகனை மிக நல்ல முறையில் வளர்த்து வரும் விஜே மகேஸ்வரி தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கணவரை விவாகரத்து செய்ய காரணம்:

இந்த நிலையில் தற்போது தனது கணவரை ஏன் விவாகரத்து செய்தேன் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார் மகேஸ்வரி இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

என்னுடைய கணவர் என்னை மிகவும் அடிமையாக நடத்தி வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தார். குறிப்பாக நண்பர்களுடன் பழக கூடாது .எந்த ஆண்களுடனும் நடிக்க கூடாது.

வெறும் விஜேவாக மட்டுமே இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார். அது மட்டும் இல்லாமல் சீரியல்களில் நான் நடித்தால் குடும்பத்து மானமே போய்விடும் என என்னை மிரட்டி வைத்திருந்தார்.

இதனால் நான் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டேன். பணத்தேவை அதிகம் இருந்ததால் அந்த சமயத்தில் என்னால் எப்படி சமாளிப்பது என்று கூட தெரியாமல் அவர் கொடுத்த டார்ச்சரால் நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி விட்டேன்.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய அம்மாவுக்கு ஒரு சின்ன உதவி கூட செய்யக்கூடாது. மீறியும் நான் அவர்களுக்கு ஏதேனும் பணத்தொகை கொடுத்துவிட்டால் அம்மா வீட்டிலேயே இருந்து விடு என்று சொல்லி என்னை அடிப்பார்.

இதனால் என்னுடைய அம்மா ஒரு கட்டத்தில் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி என்னுடைய வீட்டை விட்டு வெளியேறி நான் வீட்டு வேலைக்கு செல்ல போகிறேன் என கூறினார்.

இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தையும் வேதனையும் கொடுத்தது. இத்தனை வருடங்கள் என்னை கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வளர்த்த ஆளாக்கிய என் அம்மாவை நான் எப்படி வீட்டு வேலைக்கு அனுப்ப முடியும்?

இதுவே அவங்க நான் இப்படி வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் என்னை வீட்டு வேலைக்கு அனுப்புவார்களா? என்பது என் மனதில் தோன்றியது.

கணவர் டார்ச்சர் தாங்க முடியல:

இருந்தாலும் பொறுமையாக இருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் கணவரின் டார்ச்சர் தாங்கவே முடியவில்லை உடன் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல தொல்லைகளை கொடுத்து எனக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் எல்லைக்கு மீறி என்னை சந்தேகப்படவும் ஆரம்பித்தார். இது எல்லாம் பார்த்துக் கொண்டு என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த நான் அவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து துணிந்து விவாகரத்து செய்து விட்டேன் .

தற்போது என்னுடைய மகன் மற்றும் அம்மாவுடன் நிம்மதியாக மகிழ்ச்சியாக என்னுடைய சொந்த பணத்தில் என்னுடைய சொந்த உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என பிஜே மகேஸ்வரி எமோஷனலோடு கூறியிருக்கிறார்.

விஜே மகேஸ்வரி தொலைக்காட்சி தொகுப்பாளியாக இருந்து கொண்டே திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

மந்திரப் புன்னகை ,சென்னை 28 -2 , பியார் பிரேமா காதல், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.