நேரலையில் பிரியா பவானி ஷங்கர் செய்த அசிங்கம்..! அட கொடுமைய.. தீயாய் பரவும் வீடியோ..!

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு கதாநாயகியாக வந்த ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சின்ன திரையில் செய்தி தொகுப்பாளராக இருந்த ப்ரியா பவானி சங்கர் அதன் பிறகு பிரபலங்களை பேட்டி எடுக்கும் தொகுப்பாளராக பணிப்புரிந்து வந்தார்.

அதன் பிறகு இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியலில் 2014 ஆம் ஆண்டு நடித்தார் ப்ரியா பவானி சங்கர். இந்த சீரியலில் நடித்ததற்காக விஜய் டெலிவிஷன் விருதுக்கூட வாங்கினார்.

தமிழ் சினிமாவில் எண்ட்ரி:

முதன் முதலாக 2017 ஆம் ஆண்டில் மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார் ப்ரியா பவானி சங்கர். இந்த திரைப்படத்தில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

priya bhavani shankar

அதில் எஸ்.மது என்கிற அவரது கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே என நடித்து வந்தார். சமீபத்தில் கூட பத்து தல, ருத்ரன், பொம்மை போன்ற படங்களில் நடித்திருந்தார்.

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு பேட்டியில் பேசும்போது தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்திருந்தார்.

மினிஸ்டருக்கு முன் செய்த செயல்:

ஆந்திர மினிஸ்டரை வைத்துகொண்டு இவர் செய்த காரியத்தை பகிர்ந்துள்ளார் அவர் கூறும்போது, ”ஒருமுறை ஆந்திர பிரதேசத்தில் மினிஸ்டர் பப்ளிக்குக்கு முன்னாடி பேசிட்டு இருக்காரு. இந்த நிகழ்ச்சி லைவ் ல போயிட்டு இருக்கு.

Priya_Bhavani_Shankar_4

அவர் பேசிட்டு இருக்கும்போதே நின்றுகொண்டிருக்கும் அந்த மேடை கொலாப்ஸ் ஆயிட்டு. அதனால் மேடைல இருந்த எல்லோரும் விழுந்துட்டாங்க. தப்புதான் ஆனால் யாராச்சும் கீழ விழுந்தாலே நமக்கு ஆட்டோ மேட்டிக்கா சிரிப்பு வந்துடும்.

அந்த வகையில் அந்த மினிஸ்டர் கீழே விழுந்ததும் எனக்கு ஆட்டோமேட்டிக்காக சிரிப்பு வந்துடுச்சி. கையை வச்சி மறைச்சிக்கிட்டே சிரிச்சுட்டு இருந்தேன். இத்தனையும் லைவ்ல போயிட்டு இருக்கு. பிறகு லைவ் போடுறவங்க என்னை மட்டும் மறைச்சு அந்த வீடியோவை போட்டாங்க” எனக் கூறியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

அவர் பேசிய இந்த வீடியோதான் தற்சமயம் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.