பானுப்ரியாவின் பரிதாப நிலை.. இந்த கதி யாருக்குமே வரக்கூடாது.. வரவே கூடாது…!

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பானுப்ரியா.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் மொழித்த பழமொழி திரைப்படங்களில் வெற்றி நாயகியாக ஜொலித்து வந்திருந்தார் .

நடிகை பானு பிரியா:

90 ஸ் காலகட்டத்தில் இந்தி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட பானுப்பிரியா தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்பட்டிருந்தார்.

இதுவரை 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் பானுப்பிரியா தெலுங்கில் மட்டும் கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அத்துடன் தமிழில் 40 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். சில மலையாள படங்களிலும் கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தன்னுடைய 17 வயது நடிக்க ஆரம்பித்த பானுப்பிரியாவின் முதல் தமிழ் திரைப்படம் “மெல்ல பேசுங்கள்” இந்த திரைப்படம் 1983 ஆம் ஆண்டு வெளியாகியது .

அதை அடுத்து இவர் தெலுங்கு படத்தில் நடிக்க சென்றார். அங்கு சித்தாரா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

பரதநாட்டியத்தில் அதீத ஆர்வம்:

நடிப்பை தாண்டி பரதநாட்டியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வந்த பானுப்பிரியாவுக்கு அடுத்து திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது.

அத்துடன் இவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலான கதாபாத்திரம் நடனமாடும் கதாபாத்திரமாகவே அமைந்தது.

இவரது நடனம் அவ்வளவு சிறப்பாக இருந்ததால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பரதநாட்டியம் என்றாலே பானுப்ரியா தான் என்று அவரையே தொடர்ந்து புக் செய்து வந்தார்கள்.

நளினமான நடனத்துடன் கூடிய நடிப்பு பலதரப்பட்ட மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது 58 வயதாகும் பானுப்பிரியாவுக்கு மெல்ல மெல்ல திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். தன்னுடைய உணர்ச்சிகளை கண்களாலே வெளிப்படுத்தும் திறமை கொண்ட நடிகையாக பார்க்கப்பட்டார்.

பட வாய்ப்புகள் குறைய காரணம் :

ஹைடெக்ஸ் விளம்பரம் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டது. குணச்சித்திர வேதங்களில் இவர் கடைசியாக நடித்திருந்த கடைக்குட்டி சிங்கம் மற்றும் சில நேரத்தில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

பின்னர் வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போய்விட்டதால் தற்போது படங்களில் அவரை பார்க்கவே முடியவில்லை.

நடிகை பானுப்ரியா அமெரிக்காவை சேர்ந்த விருது பெற்ற புகைப்பட கலைஞரும் பிரபல பரதநாட்டிய கலைஞருமான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு அழகிய மகள் இருக்கிறார். தற்போது மகள் வெளிநாட்டில் படித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஏன் திரைப்படங்களில் நடிப்பது நடிப்பதில்லை மற்றும் பட வாய்ப்புகள் எதற்காக குறைந்தது என்பது குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

இந்த பேட்டி தற்போது அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது, என்னுடைய கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

கணவரின் மரணம் தான் இந்த நிலைமைக்கு காரணம்:

அந்த சமயத்தில் தனக்கு நினைவாற்றல் குறைந்து விட்டது. அவ்வளவு ஏன் படப்பிடிப்பில் கூட என்னால் வசனங்களை பேச முடியாது உடனடியாக நான் மறந்துவிடுவேன்.

என்னுடைய கணவரை நான் பிரிந்து விட்டதிலிருந்து எனக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. அவர் இப்போது உயிரோடு இல்லை என்பதால் அதைப் பற்றி பேச வேண்டாம்.

அது மட்டும் இல்லாமல் இதற்கிடையில் என்னைப் பற்றிய உடல்நிலை குறித்த வதந்தியும் பரவியது அது உண்மையே இல்லை என்றார் .

மேலும் வருஷம் தோறும் நடத்தப்படும் 80ஸ் நடிகர், நடிகைகளின் ரீ யூனியன் நிகழ்ச்சியில் கூட நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு,எனக்கு யாருமே அழைப்பு விடுக்கவில்லை.

என்னுடைய மகள் நண்டனில் படித்து வருகிறார். இப்போது முழு நேரமும் நான் வீட்டிலேயே தான் புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது ,வீட்டு வேலை செய்வது இப்படியாக இருந்து விட்டேன் என பானுப்பிரியா கூறியிருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக கொடிகட்டி பறந்திருந்த பானுப்ரியாவுக்கு இப்படி ஒரு பரிதாபமான நிலையா? இந்த கதி யாருக்குமே வரக்கூடாது என அவரது ரசிகர்கள் பலரும் மிகுந்த வேதனையை தெரிவித்து வருகிறார்கள்.