இர்பானுக்கு கருணை காட்டாமல்.. உரிய நடவடிக்கை எடுங்கள்.. கொந்தளித்தது யாருன்னு தெரியுமா..?

கடந்த சில வருடங்களாகவே பிரபலங்கள் என்கிற வரிசையில் யூடியூப் பிரபலங்களும் வர துவங்கியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இணையத்தின் பயன்பாடு அதிகமாக துவங்கிய நாள் முதல் யூட்யூப் என்பது பொதுமக்கள் மத்தியில் பிரபலமான ஒரு ஊடகமாக மாறி இருக்கிறது.

இந்தியாவில் 4g தொழில்நுட்பம் வந்த காலகட்டத்தில் பிரபலமான பல யூட்யூப்பர்களில் முக்கியமானவர்  யூட்யூபர் இர்ஃபான்

ஆரம்பத்தில் தனது சொந்த விஷயங்களை வீடியோவாக பதிவேற்றி வந்த இர்ஃபான் போகப் போக சென்னையில் உள்ள உணவகங்களுக்கு சென்று அங்குள்ள உணவுகள் குறித்து விமர்சனம் கொடுக்க துவங்கினார்.

வளர்ந்துவந்த இர்ஃபான்:

பிறகு அதற்கு அதிகமான வரவேற்புகள் வரத் துவங்கினர. அதனைத் தொடர்ந்து இர்பான் தொடர்ந்து தமிழ்நாட்டின் முக்கியமான உணவு விமர்சனம் அளிக்கும் யூட்யூப்பராக வளர்ந்து வந்திருக்கிறார்.

irfan

ரோட்டுக்கடை உணவகங்களில் தொடங்கி நட்சத்திர உணவகங்கள் வரை பல உணவகங்கள் குறித்த அவரது விமர்சனங்களை பார்க்க முடியும். அதே சமயம் இர்ஃபான் குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டு தன் இருக்கின்றன. ஏற்கனவே ஒருமுறை ஒரு கார் விபத்து பிரச்சனையில்  இர்ஃபானின் பெயர் அடிபட்டது.

சமீபத்தில் வந்த சர்ச்சை:

சமீபத்தில் கூட அவருக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டது தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியச் சட்டப்படி குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் பாலினம் என்ன என்று கண்டறிவது ஒரு குற்றமாக பார்க்கப்படுகிறது.

irfanmain

ஆனால் வெளிநாடுகளில் அது அப்படி பார்க்கப்படுவதில்லை. இதனால் வெளிநாட்டிற்கு சென்ற இர்ஃபான் அங்கு தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

துபாய் போன்ற நாடுகளில் இப்படி குழந்தைகள் பிறக்கும் முன்பே அவர்கள் என்ன பாலினம் என்று கண்டறிந்து விழா நடத்துவது சகஜமான விஷயமாக இருந்தாலும் இந்தியாவில் அது அப்படி இருப்பது கிடையாது.

மன்னிப்பு கூடாது:

இந்த நிலையில் இதற்கு வழுவான எதிர்ப்புகள் இருந்ததால் மன்னிப்பு கேட்ட இர்ஃபான் அந்த வீடியோவையும் நீக்கி இருந்தார். இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசும்போது இர்ஃபான் மீது எந்த கருணையும் காட்டாமல் அரசு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனெனில் அவர் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று முதல்வர் ஸ்டாலினை டேக்  செய்து பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து இர்ஃபான் பிரச்சனை மீண்டும் ட்ரெண்ட் ஆக துவங்கியுள்ளது.