நடக்கும் போது அந்த உறுப்பை மட்டும் போகஸ் செய்து.. மூச்சு முட்ட வைக்கும் நயன்தாரா..!

மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து தமிழில் மிகப்பெரும் உச்சத்தை தொட்டு இருப்பவர் நடிகை நயன்தாரா. இளம் வயதிலேயே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு மலையாள சினிமாவிற்குள் அறிமுகமானார் நயன்தாரா.

2003 ஆம் ஆண்டு அவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இரண்டு மலையாள திரைப்படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு மலையாளத்தில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து தமிழில் முயற்சி செய்த நயன்தாராவிற்கு 2005 ஆம் ஆண்டு அய்யா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் திரைப்படமே அவருக்கு முக்கியமான திரைப்படமாக இருந்தது.

சூப்பர் ஸ்டாருடன் வாய்ப்பு:

அடுத்து அவர் நடித்த திரைப்படம் சந்திரமுகி. அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கஜினி, கள்வனின் காதலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்றார். அதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

2008 ஆம் ஆண்டு தனுஷ் உடன் சேர்ந்து நடித்த யாரடி நீ மோகினி திரைப்படம் அவருக்கு அதிக வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாக இருந்தது அதனை தொடர்ந்து 2008, 2009 ஆகிய காலகட்டங்களில் அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தன.

காதல் விவகாரம்:

இதற்கு நடுவே நடிகை நயன்தாராவிற்கும் நடிகர் சிம்புவுக்கும் இடையே காதல் இருந்து வந்ததால் அது ஒரு சர்ச்சையாக பேசப்பட்டு வந்தது. அதற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே காதல் முறிவும் ஏற்பட்டது. பிறகு 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த பொழுது அவருக்கும் அந்த படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுக்குமிடையே காதல் ஏற்பட்டது.

பல வருடங்கள் நீடித்த அந்த காதல் பிறகு திருமணத்தில் சென்று முடிந்தது தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற்று வரும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். அதேபோல தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாகவும் நயன்தாராதான் இருந்து வருகிறார்.

தற்போதைய நிலவரப்படி அவர் பத்து கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவதாக பேச்சுக்கள் இருக்கின்றன இந்த நிலையில் நயன்தாரா தற்சமயம் குட்டியான உடை அணிந்து வெளியிட்டிருக்கும் அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக வைரலாக துவங்கியிருக்கின்றன. மேலும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.