செல்வாக்கு இருந்தும் மகனுக்காக சிபாரிசு கேட்காத செந்தில்.. காரணம் தெரிஞ்சா வியந்துடுவீங்க..!

தமிழ் சினிமாவில் பல தலைமுறைக்கும் பேசும் திறமை வாழ்ந்த காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் செந்தில்.

இவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்து இன்றுவரை புகழ்பெற்ற காமெடி நடிகராக இருந்து வருகிறார்.

நடிகர் செந்தில்:

அது மட்டும் இல்லாமல் கவுண்டமணி செந்தில் காமெடி என்றாலே இன்று வரை மக்களின் பேவரட்டாக இருந்து வருகிறது.

காலங்கள் கடந்ததும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் செந்தில் 1951 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் தான் பிறந்தார்.

ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி படிப்பை படித்திருக்கும் நடிகர் செந்தில் தன தந்தை திட்டிய காரணத்தால் 12 வயசிலே சொந்த ஊரை விட்டு ஓடி வந்துவிட்டார்.

அதன் பின்னர் எண்ணெய் செக்கு ஆலையில் பணிபுரிந்து வந்தார். பிறகு மதுபானக்காடையில் சில நாட்கள் வேலை செய்து வந்தார்.

அதன் பிறகு தான் நாடகத்தில் சேர்ந்து தனது நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்ட செந்தில் பிறகு திரைத்துறையில் நுழைந்த சிறு சிறு வேடங்களில் நடித்து மக்களின் பிரபலமான நடிகராக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தார்.

ஒயின்ஷாப்பில் வேலை செய்த செந்தில்:

முதன் முதலில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த மலையூர் மம்மட்டியான் என்ற திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது .

அந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் அழுத்தமானதாக இருந்தது. தொடர்ச்சியாக திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து புகழ்பெற்ற நடிகராக வளர்ந்து வந்தார்.

பின்னர் தனது பெற்றோர்களை கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து மீண்டும் சென்று சந்திக்க செந்திலை மிகுந்த பெருமையோடு வரவேற்றார்களாம்.

படத்திற்கு படம் இவரது பாடி லாங்குவேஜ் ,எதார்த்தமான நடிப்பு, காமெடி உள்ளிட்டவை மக்களை வெகுவாக கவர்ந்தது .

குறிப்பாக இவரது உடல் தோற்றத்திற்கு ஏற்றவாறு இவர் காமெடி செய்துதான் ஒட்டுமொத்த மக்களின் கவனம் ஈர்த்த காமெடி நடிகராக பெரும் புகழ்பெற்றார்.

இதுவரை கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும், 2019ம் ஆண்டு செந்தில் ராசாத்தி தொலைத்தொடர்களில் நடித்தார் .

மகனுக்கு சிபாரிசு செய்யாத செந்தில்:

இதனிடையே செந்தில் 1984 ஆம் ஆண்டு கலைச்செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மணிகண்ட பிரபு ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

செந்திலின் மூத்த மகன் ஆன மணிகண்ட பிரபு பல் மருத்துவராக இருக்கிறார். தன்னுடைய மருத்துவமனைக்கு தன்னுடைய தந்தையின் பெயர் சூட்டி பெருமைப்படுத்தியிருக்கிறார்.

மகன் மணிகண்ட பிரபுவின் மனைவியும் பல் மருத்துவர் தான். இருவரும் இணைந்து தான் இந்த பல் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள்.

இவர் தன்னால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்து வருகிறார் அத்துடன் மணிகண்ட பிரபுவுக்கு சிறுவயதிலிருந்தே படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததாம்.

அதுமட்டுமில்லாமல் செந்தில் தன்னுடைய வாழ்க்கையில் என்னதான் ஒரு பிரபலமான காமெடியனாக இருந்தாலும் அவரது வம்சத்தில் இதுவரை யாருமே படித்ததே இல்லையாம் .

செந்தில் மகன் மட்டும் டாக்டர் படிப்பை முடித்து இருக்கிறார். செந்தில் தன் மகனுக்கு MBBS சீட் வாங்கி கொடுக்க சிபாரிசு செய்ய பலர் இருந்தும்.. செல்வாக்கு இருந்தும்.. இந்தியன் படத்தில் நடித்த காரணத்தினால் சிபாரிசு வேண்டாம் என மறுத்து மகனை BDS படிக்க வைத்துள்ளார்.