இந்த மேட்டர்ல ஆம்பளைங்க ரொம்ப பாவம்..! வெளிப்படையாக கூறிய நடிகை நித்யா மேனன்..!

தமிழ் சினிமாவில் கொஞ்சமான அளவில் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை நித்யா மேனன்.

இவர் தென்னிந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் பிரபலமாக இருந்து வரும் நடிகையாக இருக்கிறார். கேரளாவை பூர்விகமாகக் கொண்டவர் நித்யா மேனன். இவர் சிறு வயதில் இருந்தே திரைத்துறையில் நடித்து வருகிறார்.

முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு ஆகாஷ கோபுரம் என்னும் மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நித்யா மேனன். அதற்கு முன்பே நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரமாக இவர் நடித்திருக்கிறார்.

கேரள நடிகை:

இவர் சிறப்பான நடிப்பை பார்த்த சினிமா இயக்குனர்கள் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகளை கொடுக்க துவங்கினர். அதன்படி மலையாளத்தில் வெள்ள தூவல், கேரளா ஏஞ்சல், ஜான் போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் நித்யா மேனன்.

அதன் பிறகு மிக தாமதமாகத்தான் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜே கே எனும் நண்பனின் கதை, காஞ்சனா 2 போன்ற நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு அடையாளமாக அமைந்த திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி திரைப்படம் தான்.

அந்த திரைப்படத்தின் மூலமாக அப்பொழுது பலரும் இவருக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர். தொடர்ந்து மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்த நித்யா மேனனின் கதாபாத்திரம் அனைவரும் வியக்கும் விதத்தில் இருந்தது.

தனுஷ் படத்தில் வரவேற்பு:

சமீபத்தில் இவர் நடித்து தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் இருக்கிறது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷிற்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நித்யா மேனன். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசிய நித்யா மேனன் கூறும் பொழுது கண்ணீர் விட்டு அழுவது என்பது பெண்களுக்கு ஒரு பலமான விஷயம்தான் நானும் அப்படி தான். ஆனால் ஆண்களை நினைத்தால்தான் எனக்கு பாவமாக இருக்கிறது.

ஏனெனில் ஆண்களால் அழ முடியாது. சிறு வயது முதலே ஆண் பிள்ளை என்றால் அழக்கூடாது என்று சொல்லி சொல்லி அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் மிகவும் பாவம் அழுகை என்பது ஒரு உணர்ச்சிதான். உண்மையில் அழுவதன் மூலம் நமது மனதில் இருக்கும் பாரத்தை எல்லாம் இறக்கி வைத்து விடலாம். மேலும் அது உங்களை வலிமையாகும். என்று கூறி இருக்கிறார் நித்யா மேனன்.