நான் பொம்பளையா இருந்திருந்தா.. மம்முட்டியுடன் அது நடந்திருக்கும்.. அதிர வைத்த இயக்குனர் மிஷ்கின்..!

தமிழில் சர்ச்சையான சில இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின்.

அதே திரைப்படத்தில் தனது நண்பரான நரேனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நரேனுக்கு அஞ்சாதே முகமூடி போன்ற திரைப்படங்களில் வாய்ப்புகளை கொடுத்து வந்தவர் மிஷ்கின்.

பெரும்பாலும் மிஷ்கின் வருடத்திற்கு ஒரு படம் என்றெல்லாம் இயக்க மாட்டார். ஆனாலும் அவர் இயக்கம் திரைப்படங்கள் தனித்துவமான திரைப்படமாக இருக்கும். அப்படியாக அவர் இயக்கிய நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு மாதிரியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பை பெற்றவை என்று கூறலாம்.

தமிழில் வந்த வரவேற்பு:

ஆனால் சில சமயங்களில் பேட்டிகளில் பேசும்பொழுது மிஷ்கின் தேவையில்லாமல் விடும் வார்த்தைகள் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்திவிடும்.

இப்படிதான் உதயநிதி நடித்து இவர் இயக்கிய சைக்கோ திரைப்படம் வெளியான சமயத்தில் மக்கள் திரைப்படங்களை பார்க்க செல்லும் பொழுது மூளைகளை கழட்டி வைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று பேசி இருந்தது வைரலாகி இருந்தது.

அதேபோல துப்பறிவாளன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படம் உருவானது. அப்போது விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படம் பாதியிலேயே நின்றது.

விஷாலுடன் நடந்த சண்டை:

ஏனெனில் அந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் அந்த படத்தை தயாரித்ததும் விஷால்தான். சம்பளம் தொடர்பாகதான் இவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து மேடையில் பேசும்பொழுது விஷாலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் மிஷ்கின்.

இதே போல ஒரு சம்பவம்தான் மம்மூட்டியிடமும் நடந்திருக்கிறது அதுதான் தற்சமயம்  மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது. ராம் இயக்கிய பேரன்பு திரைப்படத்தில் மலையாள நடிகரான மம்முட்டி நடித்திருந்தார்.

அவர் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இயக்குனர் ராம் மற்றும் மிஷ்கின் இருவருமே வெகு நாட்களாக நண்பர்கள் என்பதால் அந்தப் பட நிகழ்ச்சியில் மிஷ்கின் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய மிஸ்கின் நான் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் அவரை கற்பழித்து இருப்பேன் என்று பேசியிருந்தார். அது அப்பொதே மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக இருந்து வந்தது.