நடிகை தேவயாணி கேட்ட நறுக் கேள்வி..! ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்து போயிடுச்சு..!

வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து வரவேற்பை பெற்ற நடிகைகளில் நடிகை தேவயானியின் முக்கியமானவர். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார்.

தமிழில் இவர் நடித்த காதல் கோட்டை, சூரிய வம்சம் போன்ற திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்கள் ஆகும். மும்பையை சேர்ந்த நடிகை ஆக இருந்தாலும் கூட தேவையானி பாரம்பரிய உடைகளை அணிந்துதான் அதிகமாக நடிக்க கூடியவர்.

கவர்ச்சியாக பெரிதாக நடிக்க மாட்டார். அதனால்தான் அவர் தமிழ் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து மலையாளம் ஹிந்தி என்று நடித்து வந்த தேவயானி தொட்டால் சிணுங்கி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.

தமிழில் அறிமுகம்:

ஆனால் அவருக்கு அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. அதற்கு பிறகு கல்லூரி வாசல், பூமணி என்று நிறைய திரைப்படங்களில் இவர் நடித்தார்.

ஆனால் காதல் கோட்டை திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதில் கமலி என்கிற அவரது கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படம் சூர்ய வம்சம்.

சூரியவம்சம் திரைப்படத்தில்தான் அவரது கணவர் ராஜகுமாரன் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே காதல் உண்டானது. விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் ராஜகுமாரன் இயக்கத்தில் உருவானது.

இயக்குனருடன் காதல்:

அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக தேவயானி நடித்த பொழுது இந்த காதல் இன்னமும் வலுப்பெற்றது. இந்த நிலையில் வெகு காலங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை தேவயானி. அவர் ஒரு முறை பேட்டி ஒன்றில் பேசும் பொழுது பல  நடிகர்களின் மூக்கை உடைக்கும் விதமாக ஒரு கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.

பல பிரபலங்கள் கூடியிருந்த அந்த மேடையில் தேவையானி அப்படி ஒரு கேள்வியை கேட்டது விஜயகாந்திற்கு ஒரு பெரும் மரியாதையை பெற்றுக் கொடுத்தது.

அதில் அவர் கேட்கும் பொழுது விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த பொழுது அவர் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டினார். கார்கில் போர் நடந்த பொழுது அந்த போருக்காக நிதி திரட்டினார். அதேபோல நடிகர் சங்க கட்டிடம் கடனில் இருந்த பொழுது அதற்காக வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளை நடத்தினார்.

ஆனால் விஜயகாந்துக்கு பிறகு பல தலைவர்கள் வந்த பொழுதும் யாராவது ஒருவராவது அப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த முடிந்ததா என்று நேருக்கு நேராக கேட்டிருந்தார் தேவயானி. அந்த ஒரு துணிச்சல் தேவயானிக்கு மட்டுமே இருந்தது. மேலும் அந்தக் கேள்வி விஜயகாந்திற்கு அதிக பெருமையை சேர்த்து கொடுத்தது.