கமுக்கமாக மூன்றாம் திருமணம் செய்து கொண்டு சார்பட்டா நடிகரின் முதல் மனைவி..!

திரையுலகை பொருத்த வரை கண்டதும் காதல், பின் திருமணம் அதனை அடுத்து விவாகரத்து என்பது நிமிடத்திற்கு நிமிடம் நிகழக்கூடிய சம்பவமாகவே உள்ளது. அந்த வகையில் சார் பாட்டா நடிகரின் முதல் மனைவி மூன்றாவது திருமணம் செய்து கொண்டிருக்கும் விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனை அடுத்து வாயாடி வனிதா அக்காவையே மிஞ்ச கூடிய வகையில் இவர் மூன்றாவது முறை திருமணம் செய்து கொண்டு இருக்கிறாரா என்ற விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமூகமாக நடந்த மூன்றாம் திருமணம்..

உன்னைச் சரணடைந்தேன் என்ற திரைப்படத்தில் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த மீரா வாசுதேவனை உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?

இந்தப் படத்தில் இவர் பாபி எனும் ஒரு பிடிவாத குணம் கொண்ட கிராமத்து பெண்ணாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.  இதன் மூலம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதும் கிடைத்தது.

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து அசத்தியவர். இவர் திரைப்படம் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் குடும்ப குத்து விளக்காய் நடித்து வருபவர்.

 

அத்துடன் திரையுலகில் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் இளங்கலை ஆங்கிலம் மற்றும் உளவியலில் பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இதில் குறிப்பாக செட் மேக்ஸ் விளம்பரத்தில் நடித்ததின் மூலம் திரை உலகில் நுழைந்தார்.

மேலும் இவர் ஜெரி, ஆட்டநாயகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். அத்துடன் ஜெயம் ரவி நடிப்பில் வெளி வந்த அடங்கமறு திரைப்படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2, காவேரி போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

அதுவும் சார்பட்டா நடிகரின் முதல் மனைவி..

சின்னத்திரை பெரிய திரை என்று இரண்டு திரைகளிலும் மாறி மாறி பயணித்த மீரா வாசுதேவன் 2005-ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் ஆன அசோக்குமாரின் மகன் விஷால் அகர்வாலை மணந்து கொண்டார்.

எனினும் இவரது மண வாழ்க்கை நீண்ட காலம் நீடித்து நிற்காததை அடுத்து 2010-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இதை தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு இவர் மலையாள நடிகரான ஜான் கொக்கனை மணந்தார்.

இவருக்கு அரிஹா ஜான் என்ற ஒரு மகன் பிறந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு 2016 -ஆம் ஆண்டு சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இப்படி இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு சரியான மணவாழ்க்கை அமையாத சூழ்நிலையில் தற்போது சைலண்டாக பண்ணியிருக்கும் விஷயம் தான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அதிர்ச்சி தரும் தகவல்..

அப்படி என்ன அதிர்ச்சி தரக்கூடிய விஷயத்தை செய்தார் என்று நீங்கள் யோசிக்கலாம். யாரும் எதிர்பாராத சமயத்தில் மூன்றாவதாக ஒரு நபரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த மூன்றாவது திருமணம் ஆனது விவின் என்ற நபர் ஒரு நடந்துள்ளது. மேலும் இந்த திருமணத்தில் அவருக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 

இதனை அடுத்து இந்த ஜோடிக்கு ரசிகர்கள்  வாழ்த்து தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களால் பேசப்படும் பேசும் பொருளாக மாறி உள்ளது.