கல்கி 2898 AD படம் எப்படி இருக்கு..? ஹாலிவுட் லெவல் என்ற கனவு பலித்ததா..?

கல்கி 2898 AD திரைப்படம்:

இந்திய சினிமாவின் பிரபல இயக்குனரான நாக் அஷ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் தான் கல்கி.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களில் வெளியாகிய மாபெரும் பான் திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் பிரம்மாண்ட நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ராணா ரகுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் .

மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்திருக்கும் திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. நேற்று உலகம் முழுக்க வெளியாகிய இருந்த இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கல்கி 2898 AD கதை:

இப்படம் ஆரம்பிக்கும் போதே மகாபாரதப் போர் நடைபெற்று முடிகிறது. 6000 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் கடைசி நகரம் என்று சொல்லப்படும் காசியில் தான் இந்த முழு கதையும் நடக்கிறது.

அங்குள்ள மக்களை யாசின் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கமல்ஹாசன் ஆட்சி செய்து அடிமையாக வைத்திருக்கிறார்.

அந்தரத்தில் இருக்கும் அந்த இடத்தை காம்ப்ளக்ஸ் என்று அழைக்கிறார்கள். அங்கு சுத்தமான காற்று, தண்ணீர், உணவு போன்றவை கிடைக்கிறது.

இந்த இடத்தில் படத்தின் ஹீரோவான பிரபாஸ் நுழைய வேண்டும் என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக வைத்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த காம்ப்ளக்ஸில் வாழ்ந்து கொண்டிருந்த நடிகை தீபிகா படுகோன் தப்பித்து விட அவளது வயிற்றில் இருக்கும் குழந்தை தான் கிருஷ்ணன் என்பது தெரிய வருகிறது.

இதனிடையே நடிகர் அமிதாபச்சனுக்கு கிருஷ்ணர் ஒரு சாபம் விடுகிறார். அதாவது, மகாபாரதப் போர் முடியும் போது கொரோனாச்சார்யாவின் மகனான அமிதாப்பச்சன் பாண்டவர் குடும்பத்தில் கருவில் உள்ள ஒரு குழந்தையை அழிக்கிறான்.

இதனால் கோபமடைந்த கிருஷ்ணன் உனக்கு மரணமே இல்லை. உடல் முழுவதும் ரத்தம் வடிந்து நான் கலியுகத்தில் ஒரு தாயின் வயிற்றில் இருக்கும்போது என்னை நீ காப்பாற்ற வேண்டும் அப்போதுதான் உன்னுடைய இந்த சாபம் தீரும் என கூறுகிறார்.

கிருஷ்ணரின் இந்த சாபத்திலேயே 6000 ஆயிரம் வருடங்கள் ஓடி 800 வருடமாக உயிரோடு இருகிறார் அமிதாப் பச்சன். அந்த சமயத்தில் கமல் ஹாசன் வாழ்ந்து வரும் காம்ப்ளக்ஸ் இல் இருந்து தப்பித்து வந்த தீபிகா படுகோனின் வயிற்றில் இருப்பது தான் கிருஷ்ணர் தான் என்பது அமிதாப்பச்சனுக்கு தெரிய வருகிறது.

உடல் முழுக்க ரத்தம் வடிந்து பெரும் ஆபத்தில் இருக்கும் தீபிகா படுகோனை காப்பாற்றி கிருஷ்ணர் கொடுத்த சாபத்திலிருந்து விடுபட தீபிகாவை தேடி வருகிறார் அமிதாப் பச்சன்.

இதற்கு பிரபாஸ் எந்த விதத்தில் உதவுகிறார். அத்தோடு கமல் நினைத்ததை அடைந்தாரா? என்பதே இந்த பிரம்மாண்ட கல்கி படத்தின் கதையாக இருக்கிறது.

கல்கி படத்தின் அலசல்:

இந்த திரைப்படத்தில் கிராபிக் காட்சிகள் மிகப்பிரமாண்டமாகவும் அவ்வளவு அற்புதமாகவும் ஹாலிவுட் ரேஞ்சிற்கு எடுத்து இருக்கிறார்கள் .

திரையில் படத்தை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் ஆடியன்ஸ்களுக்கு கிராபிக் காட்சிகள் மிகப்பெரிய ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

இயக்குனர் நாக் அஸ்வின் இன்றைய காலகட்ட டெக்னாலஜி பொறுத்து படத்தை மிக பிரம்மாண்டமாக கையாண்டு இருப்பதற்கு பூங்கோத்துக் கொடுக்கலாம்.

இப்படம் பிரபாஸுக்கு மிகப்பெரிய வரலாற்று திரைப்படமாக வெற்றி கொடுக்கும். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு சரியான வெற்றிகள் கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்த பிரபாஸுக்கு இந்த திரைப்படம் மீண்டும் அவரை உச்சத்தை கொண்டு செல்லும்.

அதேபோல் கருவை சுமந்து கொண்டிருக்கும் தீபிகா படுகோனின் நடிப்பு வேற லெவலில் இருக்கிறது. அந்த திரைப்படத்தில் தீபிகா படுகோனே தவிர வேறு யாராலும் இவ்வளவு கச்சிதமாக நடிக்க முடியாது என்பதை நம் அனைவருக்கும் உணர்த்தி விடுகிறார்.

மேலும் கமல் வாழ்ந்து வரும் அந்தரத்தில் உள்ள அந்த காம்ப்ளக்ஸில் லிஃப்ட் போல் பயன்படுத்தப்படும் பிரம்மாண்ட உருவம் சும்மா அல்லுவுடுது

கிளைமேக்ஸில் புஜு ஒரு கொரில்லா ரோபோட் போல் மாறுவது, மேட் மேக்ஸ் டைப்பில் இரண்டாம் பாதியில் வந்த சேஸிங் என அனைத்து பிரமாண்டமாக இருக்கிறது.

கல்கி படத்தின் ப்ளஸ்:

VFX காட்சிகள்,

இரண்டாம் பாதி ஜேசிங் காட்சிகள் ,

கிளைமாக்ஸில் பிரபாஸ் யார் என்று தெரியும் இடம் உள்ளிட்டவை பிரமாண்டமாக இருக்கிறது.

கல்கி படத்தின் மைனஸ்:

முதல் பாதி மிகவும் பொறுமையை சோதிக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை.

கல்கி படத்தின் வசூல் விவரம்:

மொத்தமாக பிரமாண்ட பொருட்செலவில் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ. 3 கோடியை வசூலித்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.

அதன்படி தமிழகத்தில் மட்டும் முதல் நாளிலே ரூ.5 கோடி வசூல் ஈட்டி இருக்கிறது. இப்படம் முதல் நாளில் உலகம் முழுக்க சுமார் ரூ. 200 கோடி வசூலித்திருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.