பாவம் செஞ்ச கண்ணை கொண்டு இதை பாத்துட்டேன்… நடிகை மும்தாஜ் கண்ணீர்..!

தமிழ் சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை மும்தாஜ். பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக அறிமுகம் ஆகும் நடிகைகள் தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பது என்பது கடினம்.

ஆனால் மும்தாஜை பொருத்தவரை அப்படி கிடையாது. அவருக்கு ஏக்கசக்கமான வரவேற்புகள் தமிழில் கிடைத்தன. இயக்குனர் டி ராஜேந்திரன் இயக்கிய மோனிஷா என் மோனலிசா திரைப்படத்தின் மூலமாகதான் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார் மும்தாஜ்.

வட இந்தியாவை சேர்ந்த மும்தாஜ்க்கு டி ராஜேந்திரன் மூலமாகதான் தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைத்தது. அவருக்கு கல்லூரி காலகட்டங்களிலேயே திரைத்துறையின் மீது ஆர்வம் இருந்ததால் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்து வந்தார் மும்தாஜ்.

தமிழில் எண்ட்ரி:

ஆனால் அவர் நடித்த முதல் திரைப்படமான மோனிஷா என் மோனலிசா பெரிதாக வரவேற்பை பெறவில்லை இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வந்தார் மும்தாஜ். அதற்கு பிறகு விஜய் நடித்த குஷி திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அந்த திரைப்படத்தில் கவர்ச்சியான ஒரு கதாபாத்திரத்தில் மும்தாஜ் நடித்திருந்தார். மேலும் அந்த படத்தில் அவர் நடித்த கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் அதிகமான வரவேற்பு பெற்றது. அடுத்து மும்தாஜ் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக மாறினார்.

குஷி திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு அதிகமான வாய்ப்புகள் வர துவங்கின. முக்கியமாக ஐட்டம் பாடல்களில் ஆடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே வந்தது. நிறைய திரைப்படங்களில் வரும் கவர்ச்சி பாடல்களில் நடனம் ஆடி வந்தார்.

ஆன்மீகத்தில் ஆர்வம்:

ஆனால் கவர்ச்சி நடிகைகளுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பு இருக்காது. அந்த வகையில் இவருக்கு வரவேற்பு குறைய தொடங்கியது பிறகு சினிமாவை விட்டு விலகிய மும்தாஜ் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.

தனது மதப்படி அவர் செய்யும் செயல்களெல்லாம் தவறு என உணர்ந்தார் அதனை தொடர்ந்து தன்னுடைய இஸ்லாம் மதத்தை கடுமையாக பின்பற்ற துவங்கினார் மும்தாஜ். அல்லாவை தவிர வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை என்று ஒரு பேட்டியில் பேசி இருந்தார் மும்தாஜ்.

தற்சமயம் எப்போதும் முஸ்லிம்கள் அணியும் புர்காவில்தான் இருந்து வருகிறார். 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் மும்தாஜ். இந்த நிலையில் சமீபத்தில் ஹஜ் புனித பயணம் சென்ற மும்தாஜ் கண்ணீர் மழ்க கதறி அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

“இந்த உலகம் என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் அல்லாஹ்வின் பார்வையில் நான் புதிதாக பிறந்த குழந்தையை போல புனிதமானவர்களாக உணருகிறேன். நீங்களும் மெக்காவின் அமைதியையும் அழகையும் காண வேண்டும்.

இந்த உலகைப் பற்றி கவலைப்படாமல் அல்லாஹ்வை வழிபடுங்கள் என்று கூறியிருக்கிறார் மும்தாஜ். மேலும் பாவம் செய்த கண் மெக்காவை பார்த்துவிட்டது நடனமாடிய இந்த கால் புனிதமான கபாவில் நடந்து விட்டது என்னால் இதை செய்ய முடியும் பொழுது உங்களாலும் செய்ய முடியும் என்று தனது மதத்தை பரப்பி வருகிறார் மும்தாஜ்.