A.I மூலம் 3 மறைந்த நடிகர்கள் இந்தியன் 2 படத்தில்.. யார் யாருன்னு பாருங்க..!

திரையுலகில் இன்று நவீன தொழில்நுட்பங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து படங்கள் பிரம்மாண்டமாக ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு வெளி வருகிறது. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பம் தற்போது வேகமாக வளர்ந்து இந்தியன் 2 படத்தில் வருகிறது என சொல்லலாம்.

அந்த வகையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த டெக்னாலஜியானது தற்போது பல துறைகளில் செயல்பட்டு வருகின்ற சூழ்நிலையில் திரை உலகில் இப்படி எல்லாம் பயன்படுத்த முடியுமா? என்ற ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த மூன்று நடிகர்கள்..

ஏற்கனவே பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் சங்கரின் ஜென்டில்மேன் திரைப்படத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனை அடுத்து இந்தியன் பகுதி ஒன்றை சிறப்பாக செய்திருந்த இவர் இதில் உலக நாயகன் கமலஹாசன் சுகன்யா போன்றவர்கள் நடித்த இருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியன் 2 திரைப்படமானது விரைவில் திரைக்கு வெளி வர உள்ள நிலையில் எந்த படத்தில் இயக்குனர் சங்கர் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்.

இந்த படத்திற்கான பூஜை 2017-இல் போடப்பட்டது என்றாலும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வர உள்ளதால் ரசிகர்களின் மத்தியில் இந்த படம் எப்போது வெளி வவரும் என்ற ஆவலை தூண்டி உள்ளது.

கிட்டத்தட்ட ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களுக்கு விருந்தாக கூடிய இந்த படத்தை பற்றி நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும் என்று சொல்லக் கூடிய அளவு சங்கர் தனது திறமை முழுவதையும் என்ற படத்திற்காக செலவிட்டிருக்கிறார்.

ஏ ஐ மூலம் இந்தியன் 2 படத்தில்…

இந்த படத்தில் நடித்த மூன்று ஆர்டிஸ்ட்கள் தற்போது நம்மிடையே இல்லை. எனினும் அவர்களது பகுதியை சங்கர் ஏற்கனவே படம் பிடித்து விட்ட நிலையில் எஞ்சிய பகுதியை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களை  நம் கண் முன் கொண்டு வர அவர் திட்டமிட்டார்.

மேலும் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் இந்தியன் பட 2 பகுதியில் வர இருக்கும் அந்த மூன்று நடிகர்கள் யார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

யார் யாருன்னு பாருங்க..

இதில் மூன்றாவதாக வருபவர் மனோபாலா. இவர் 2023 ஆம் ஆண்டு மே மாதம் இறந்து போனார். அத்தோடு இரண்டாவது இடத்தை இருப்பவர் மலையாள நடிகரான நெடுமுடி வேணு இருக்கிறார்.

இவர் இந்தியன் 1 பகுதியிலேயே மிகச் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியவர். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இறந்து போனவர். இந்தப் படத்தில் ஏஐ மூலம் நடித்திருக்கிறார்.

அத்துடன் இந்த லிஸ்டில் முதலாவதாக இடம் பிடித்து இருப்பவர் மக்கள் கலைஞர் இளைய கலைவாணர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட காமெடி நடிகர் விவேக் தான் இவரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நம்மை விட்டு சென்று மீளா துயரில் தள்ளினார்.

இந்நிலையில் இந்த நான் மூன்று நடிகர்களும் நம்மை விட்டு பிரிந்து இருந்தாலும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் இந்தியன் இரண்டு படத்தில் நடித்திருக்க கூடிய காட்சிகளை பார்க்கக் கூடிய ஆவலில் அனைவரும் காத்திருக்கிறார்கள்.