வரலட்சுமி வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டமா..? பலரும் அறியாத தகவல்கள்…!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமான போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாருக்கு  வெகு காலங்களாகவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து வந்தது.

ஆனால் சரத்குமாருக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை தன்னுடைய மகள் சாதாரணமான ஒரு வாழ்க்கையை தான் வாழ வேண்டும் அவர் நடிகையாக கூடாது என்பதில் சரத்குமார் உறுதியாக இருந்தார். இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு இருந்த ஆசை காரணமாக அவரே தன்னிச்சையாக முயற்சி செய்து போடா போடி திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார்.

முதல் பட வாய்ப்பு:

அந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார் வரலட்சுமி சரத்குமார் அந்த திரைப்படமும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் வரலட்சுமி சரத்குமார்.

 

ஒரு கட்டத்திற்கு பிறகு வில்லி கதாபாத்திரத்திற்கு ஒத்துவரும் ஒரு நடிகையாக இருந்தார் வரலட்சுமி சரத்குமார். சர்கார் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லியாக சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு பிறகு நிறைய திரைப்படங்களில் வில்லியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. யசோதா, சண்டக்கோழி 2 மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் வில்லியாக நடித்தார். பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்து தெலுங்கில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி திரைப்படத்திலும் வரலட்சுமி சரத்குமார்தான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

காதல் திருமணம்:

அந்த அளவிற்கு அவருக்கு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இதற்கு நடுவே சமீபத்தில் நிக்கலோய் சச்தேவ் என்கிற நபரை காதலித்து வந்தார் வரலட்சுமி சரத்குமார். அந்த காதல் தற்சமயம் திருமணத்தை எட்டியது இந்த மாத துவக்கத்தில்தான் இவர்களது திருமணம் நடந்தது.

கோலாகலமாக நடந்த இந்த திருமணம் அனைவராலும் பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில் சிறுவயதில் தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று வரலட்சுமி சரத்குமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பிறக்கும் பொழுது நான் பணக்கார வீட்டில் பிறக்கவில்லை.

நான் பிறந்த பொழுது என்னுடைய தந்தை ஒரு செய்தி தாள் நிறுவனத்தில் பத்திரிகையாளராகதான் பணிபுரிந்து வந்தார். எனது குடும்பமே கஷ்டப்படும் குடும்பமாக இருந்தது. மூன்றுவேளை உணவு உண்பதே கடினமான விஷயமாக இருந்தது.

சிறுவயதில் என்னுடைய தாய் தந்தையர் இருவருமே வேலைக்கு சென்றதை பார்த்திருக்கிறேன். அதனாலையே அவர்கள் படும் கஷ்டத்தை அறிந்து அவர்களிடம் பாக்கெட் மணி கூட நான் வாங்கியது கிடையாது. அதேபோல முதன்முதலாக சினிமாவில் வந்து ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆகதான் நடித்தேன் அப்படி நடித்த பொழுது நான் வாங்கிய சம்பளம் 5000 ரூபாய் மட்டுமே என்று தன்னுடைய கடந்த கால நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.