குழந்தை பெத்துக்க முடியாது.. அதை விடுங்க.. இது நடக்கவே வாய்ப்பில்ல.. நெப்போலியனை விளாசும் பிரபலம்..!

நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் குறித்த விஷயங்கள் தான் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் முக்கியமான வில்லன் நடிகராக இருந்து வந்தவர் நடிகர் நெப்போலியன்.

அதற்குப் பிறகு அரசியலில் ஆர்வம் காட்டி வந்த நெப்போலியன் பிறகு முக்கியமான பதவிகளிலும் இருந்தார். அதற்குப் பிறகு தனது மகனுக்காக அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன். அமெரிக்காவில் தற்சமயம் ஒரு ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இது மட்டுமின்றி அங்கு ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கிறார் நெப்போலியன். அதில் விவசாயமும் செய்து வருகிறார். கோடிக்கணக்கில் செல்வம் உள்ள ஒரு நபராக நெப்போலியன் இருப்பதால் அவர் நினைத்த விஷயங்கள் அனைத்தையும் அவரால் செய்ய முடிகிறது என்று கூறலாம்.

மகன் திருமணம்:

நெப்போலியன் மகன் தனுஷிற்க்கு திருமணம் செய்யவிருக்கிறார். நெப்போலியன் இதற்காக திருநெல்வேலியில் இருக்கும் ஒரு பெண்ணையும் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார். 25 வயதாகும் நெப்போலியன் மகன் தனுஷ் சதை பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

 இருந்தாலும் தனது மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்னும் ஆசையால் அவருக்கான திருமண ஏற்பாடுகளை நெப்போலியன் செய்து வருகிறார். இந்த நிலையில் இது குறித்து தனது கருத்தை கூறி இருக்கிறார் மருத்துவர் காந்தராஜ்.

நெப்போலியன் கே என் நேருவின் மூலமாகத்தான் சினிமாவிற்கு ஆறுமுகமானார். கே.என் நேருவின் உறவினர்தான் நெப்போலியன். அதற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்து நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தார். சினிமாவிற்கு பிறகு தி.மு.கவில் இணைந்து அதில் எம்.எல்.ஏவாகவும் எம்.பி ஆகவும் இருந்தார் நெப்போலியன்.

பிரபலத்தின் கருத்து:

பிறகு திடீரென பா.ஜ.கவில் சேர்ந்தார். தனது மகனுக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன் அங்கு ஐடி நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். தற்சமயம் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நெப்போலியன் மகனுக்கு அரிய வகை நோய் இருக்கிறது.

அது ஒரு ஆபத்தான நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12 முதல் 18 வயதிற்குள் இறந்து விடுவார்கள். ஆனால் அவரது மகன் 25 வயது வரை உயிருடன் இருப்பதே பெரிய சாதனை தான். ஏனெனில் இது பிறவியிலேயே வரும் பிரச்சனை.

இப்போது கர்ப்பிணிகளுக்கு ஜெனிடிக் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதை குறைத்து வருகின்றனர். அவருக்கு எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த நோய்க்கு ஹலோபதியில் மருந்தே இல்லை. அதேபோல் அவரால் இல்லற வாழ்க்கையிலும் ஈடுபட முடியாது.

அவரை திருமணம் செய்து கொள்ளும் பெண் இது தெரிந்துதான் அவரை திருமணம் செய்து கொள்கிறார். அவரின் பெற்றோர்களும் இதை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். சில பெண்கள் இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால் சில பெண்கள் விளம்பரத்திற்காகவே இப்படி செய்வார்கள் என்று இது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் டாக்டர் காந்தராஜ்