இப்படியெல்லாம் சூம் பண்ணி காட்டக்கூடாது.. இளசுகளை பதற வைக்கும் லாஸ்லியா பிக்ஸ்!.

இலங்கையிலிருந்து வந்து தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை லாஸ்லியா மரியனேசன். பொதுவாகவே தமிழ் மக்களுக்கு இலங்கையில் இருக்கும் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் மீது ஒரு ஆர்வம் உண்டு.

இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை இலங்கை தமிழில் அவர்கள் பேசும்போது கேட்பதற்கு அழகாக இருக்கும். அதனாலேயே அவர்கள் இங்கு தமிழில் பிரபலம் அடைந்து விடுகின்றனர். பிக் பாஸில் பிரபலமான ஜனனியும் கூட இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்தான்.

அதேபோல லாஸ்ட்லியாவுமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகதான் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் நடிகை லாஸ்ட்லியா. கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த லாஸ்ட்லியா யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு என்று இலங்கையில் ஒவ்வொரு பகுதிகளும் வசித்து இருக்கிறார்.

சின்னத்திரையில் வாய்ப்பு:

2015 ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் தனது வேலையை தொடங்கினார் லாஸ்லியா அதற்கு பிறகு தான் 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3யில் முக்கிய போட்டியாளராக களம் இறங்கினார் லாஸ்லியா.

அதனை தொடர்ந்து லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு என்பது கிடைக்க துவங்கியது. தொடர்ந்து அதனை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று முடிவெடுத்தார் லாஸ்லியா.

2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லாஸ்ட்லியா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் கூட அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பதால் லாஸ்லியாவிற்கு அது அதிக வரவேற்பை பெற்று தரவில்லை.

திரைப்படத்தில் முயற்சி:

இருந்தாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வருகிறார் லாஸ்லியா. தொலைக்காட்சி நிகழ்ச்சியை பொறுத்தவரை பிக் பாஸ் சீசன் 3க்கு பிறகு ஸ்டார் மியூசிக் 2 என்கிற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரே ஒரு ஷோவில் மட்டும் கலந்து கொண்டார் லாஸ்லியா.

பிரண்ட்ஷிப் திரைப்படத்திற்கு பிறகு மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தழுவலான கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு திரை வாய்ப்புகள் என்பது இதுவரை வரவில்லை.

இருந்தாலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அந்த புகைப்படங்களைதான் இப்பொழுது லைக் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.