புலிப்பாய்ச்சல்..! விஜய்யின் 100 நாள் நடை பயணம்.. திருச்சி மாநாட்டில் வெளியாகவுள்ள அதிர வைக்கும் அறிவிப்பு..!

by

in

வாழ்க்கையில் ஒரு மனிதன் எந்த இடத்தில் அவமானப்படுத்தப்படுகிறானோ அந்த இடத்தில் இருந்து தான் அவனுடைய விஸ்வரூப வளர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில் தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.

இதனை அடுத்து கோட் திரைப்படத்தில் நடித்து வரக்கூடிய இவர் விரைவில் இவரது கட்சிக்கான கொடியினை அறிமுகம் படுத்த இருப்பதாக புஷி ஆனந்த் கூறியிருப்பதோடு மாபெரும் மாநாடு ஒன்றும் நடத்தப் போவதாக விஷயங்கள் வெளி வந்துள்ளதாக செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

புலிப்பாய்ச்சல்..

தளபதி 69 படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரு பிரம்மாண்டமான நடைப்பயணம் புலிப்பாயாச்சல் போல் சுமார் நூறு தொகுதிகளில் நடக்கக் கூடிய நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

இதனை அடுத்து வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னெடுப்பாக கொண்டு இது போன்ற செயல்களில் தளபதி விஜய் ஈடுபட இருப்பதாக தெரிந்து விட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு என்ன தெரியும் இவர் எப்படி அரசியலுக்கு வருவார் என்பது போன்ற விமர்சனங்கள் வெகுவாக எழுந்த சூழ்நிலையில் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் கட்சியை ஆரம்பித்தார் அப்போதும் இவர் ட்விட்டர் அரசியல் தான் செய்து வருகிறார் என்று சொன்னார்கள்.

இதை உடைத்தெறிய கூடிய வகையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் களம் இறங்கி அளப்பரிய பணியை செய்து விட செய்திருந்தது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியது.

விஜயின் 100 நாள் நடைப்பயணம்..

2013ம் ஆண்டு இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நடந்த போது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய்க்கு VVIP பகுதியில் இடம் கிடைக்காமல் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் முன் வரிசையில் இடம் கிடைத்தது.

இதை அன்று மனதில் வைத்திருந்த விஜய் இன்று கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அன்று நடந்த அந்த கூட்டத்தில் இவரை தன்னந்தனியாக மூலையில் அமர வைத்தார்கள்.

மேலும் அங்கிருந்த சிம்ரன் விஜயிடம் வந்து தன் இருக்கையில் அமர சொல்ல அடுத்தடுத்து விக்ரம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போன்றவர்கள் மெதுவாக எழுந்து வந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டு அன்றே ஆதரித்தார்கள்.

திருச்சி மாநாட்டில் அதிர வைக்கும் அறிவிப்பு..

இந்த விஷயமானது திட்டமிட்டு விஜய்க்கு நடத்தப்பட்ட நிகழ்வாக கருதப்பட்டு மறுநாள் மீடியாக்களில் செய்திகள் வேகமாக வெளிவந்தது.

இதனை அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில் விஜய் அஜித் கார்த்தி கமல் போன்ற அனைவரையுமே முன் வரிசையில் அமர வைத்து ஒரு நிகழ்ச்சி அதை காம்பரமைஸ் செய்வதற்காக நடத்தப்பட்டது.

அப்போது நடைபெற்ற தேர்தல் சமயத்தில் அதிமுகவிற்கு விஜயின் ரசிகர்கள் பணி செய்வார்கள் என்று சொன்னதோடு அவர்களுக்கு ஆதரவாக விஜய் மற்றும் அவரது அப்பா கூறியிருந்தார்.

இதை அடுத்து மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து இதில் தங்களது ரசிகர்களின் பங்கு அதிகம் உள்ளது என்று சொல்ல காண்டாகிவிட்டார் ஜெயலலிதா.

மனதுக்குள் விஜய் பற்றியும் அவரது அப்பா பற்றியும் என நினைத்தாரோ தெரியவில்லை ஒரு முறை கொட நாட்டிற்கு அழைத்து வர சொல்லி நிக்க வைத்து மன்னிப்பு கேட்க வைத்ததாக தகவல்கள் பரவியது.

மேலும் தலைவா படத்தில் வந்த டைம் டு லீட் என்ற வார்த்தையானது மேலும் அதிமுகவின் தலைமையை பதம் பார்க்கக் கூடிய வகையில் இருந்ததால் இந்த படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய இருக்கும் தியேட்டர்களில் பாம் வைத்திருப்பதாக செய்திகள் பரவியது.

இதனை அடுத்து இந்த படம் வெளிவந்த போதும் அந்த டைம் டு லீட் என்ற வார்த்தை இல்லாமல் ஏகப்பட்ட குளறுபடிகளுக்கு இடையே வெளிவந்து சரியாக ஓடவில்லை.

இந்த அவமானத்தை தொடர்ந்து தான் விஜய் தற்போது தனி கட்சியை ஆரம்பித்து இருக்கிறார் என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.