கிளாமர் பாம்.. கவர்ச்சி உடையில் லிஃப்ட்டுக்குள்ள கிஃப்ட்.. அசர வைக்கும் ராயன் நடிகை அபர்ணா பாலமுரளி..!

தனுஷ் இயக்கி நடித்த 50-வது திரைப்படமான ராயன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளி வந்து கலவை ரீதியான விமர்சனங்களை தந்துள்ளது. அத்துடன் ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படம் சற்று ஏமாற்றத்தை தான் தந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை அபர்ணா பாலமுரளி தனது அற்புத நடிப்பை படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு பணியாற்றியதை அடுத்து தமிழ் திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார்.

கிளாமர் பாம் கவர்ச்சி உடையில்..

அபர்ணா பாலமுரளி ஒரு மிகச்சிறந்த பின்னணி பாடகியாக திகழ்வதோடு 2016-ஆம் ஆண்டு வெளி வந்த மகேசிண்ட பிரதிகாரம் என்ற மலையாள படத்தில் 2016- ஆம் ஆண்டு ஜிம்சி என்ற வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவர் கேரளாவில் இருக்கும் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்டவர். மேலும் பாடகர் மற்றும் இசையமைப்பாளரான கேபி உதய பானு இவரது தந்தை வழி மாமாவாக திகழ்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகை அபர்ணா பால முரளி இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிபுடி போன்ற பாரம்பரிய நடன பயிற்சிகளை பெற்றவர் என்பது பலருக்கும் தெரியாது.

லிப்டுக்குள் கிப்ட்..

இவர் தனது இருபதாவது வயதில் மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து 2017-இல் தமிழில் வெளி வந்த 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் எனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து 2020-இல் சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளி வந்த சூரரைப் போற்று படத்தில் பொம்மி கேரக்டரை அற்புதமாக செய்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் லிப்ட்டுக்குள் கிப்ட் என்று சொல்லக்கூடிய வகையில் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் கருப்பு நிற மிரட்டல் உடை புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது.

அசரவைக்கும் ராயன் நடிகை அபர்ணா பால முரளி..

இதற்கு காரணம் ட்ரெடிஷனல் புடவையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு ரசிகர்களின் மனதில் ரகளை செய்யக்கூடிய வகையில் ராயன் பட நடிகை அபர்ணா தன்மேனி அழகு பக்குவமாக வெளிப்படக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தை பார்த்து மிரண்டு போயிருக்கும் ரசிகர்கள் இவரை பங்கமாக கலாய்த்து வருவதோடு மட்டுமல்லாமல் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத புகைப்படங்கள் அதுவும் ப்ரீஹேரில் ஆளை அசத்த வைக்க கூடிய போஸில் உள்ளது என சொல்லி விட்டார்கள்.

ஓவர் மேக்கப் ஏதும் முகத்தில் இல்லை என்பது பார்த்ததுமே தெரியும் அளவிற்கு பக்குவமாக நேச்சுரல் பியூட்டியை வெளிப்படுத்திய அபர்ணா பாலமுரளியை அனைவரும் வர்ணித்து வருவதோடு இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு திக்கு முக்காட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் பிடித்து விடும் அப்படி பிடித்தால் உடனே லைக்குகளை அள்ளித் தந்து அவரை பாராட்டி பேச ஆரம்பித்து விடுவீர்கள்.