வடிவேலு படம் ட்ராப் ஆனதற்கு பேய்தான் காரணம்..! சிம்புதேவன் பேச்சால் ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. வடிவேலு தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் மக்களை மகிழ்விக்கும் வகையில் காமெடி செய்திருக்கிறார்.

வடிவேலு தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் கவுண்டமணி செந்தில் இருவருமே பிரபலமான காமெடி நடிகர்களாக இருந்தனர். சில திரைப்படங்களில் கவுண்டமணி, செந்திலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வடிவேலுவின் போராட்டம்:

அந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் நடுவிலும் கூட தனக்கென தனி பாணியை பயன்படுத்தி அவருடைய காமெடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றார் வடிவேலு. அதன் மூலம்தான் அவர் வளர்ச்சியை பெற்றார்.

வடிவேலு வளர்ச்சியை பெற்று காமெடியான பிறகு மிக தாமதமாக தான் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். வடிவேலு கதாநாயகனாக நடித்த படம் 23 ஆம் புலிகேசி. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு பெற்ற படமாக இருந்தது.

இப்பொழுதும் அந்த திரைப்படத்தை ரசித்து பார்க்கும் மக்கள் இருக்கதான் செய்கின்றனர். இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிம்பு தேவனும் தமிழ் சினிமாவில் முக்கியமானவர் ஆவார்.

சிம்புதேவன் காம்போ:

சிம்புதேவன் இயக்கும் பெரும்பாலான படங்கள் நல்ல கதை அம்சத்தை கொண்டிருக்கும். மேலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். சமீபத்தில் கூட அவர் இயக்கியிருக்கும் போட் திரைப்படம் அடுத்து திரையரங்கிற்கு வர இயக்க இருக்கிறது.

இந்த நிலையில் சிம்புதேவன் தனது பேட்டி ஒன்றில் திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது 23 ஆம் புலிகேசி படத்தின் வெற்றிக்கு பிறகு வடிவேலுவை வைத்து இன்னொரு திரைப்படத்தை இயக்க நான் திட்டமிட்டிருந்தேன்.

அந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முடிவு செய்திருந்தார். பிறகு சில காரணங்களால் அந்த திரைப்படத்தை அப்பொழுது எடுக்க முடியவில்லை. எனவே அதற்கு முன்னர் நான் எழுதிய கதை அறை எண் 305 இல் கடவுள் கதையை படமாக்கி விடலாம் என்று அந்த வேளையில் இறங்கிவிட்டேன்.

அதற்கு பிறகு பார்க்கும்பொழுது கிட்டத்தட்ட ஆறு, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பவும் அந்த பேய் படத்தை எடுக்கலாம் என்று நான் நினைத்தபொழுது திரும்பும் திசை எல்லாம் பேய் படங்களாக இருந்தது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து பேய் படங்களாக வந்திருந்தது. அதில் சில கதைகள் என்னுடைய படத்தின் கதைக்களத்தை மையப்படுத்தி அமைந்திருந்தது.

அதனால் அந்த திரைப்படத்தை நான் தொடவே இல்லை மேலும் வடிவேலுவும் அந்த திரைப்படத்தில் அதனால் நடிக்கவில்லை என்று கூறுகிறார் சிம்புதேவன். அப்பொழுது மட்டும் சிம்பு தேவன் அந்த திரைப்படத்தை இயக்கியிருந்தால் இவர்களது கூட்டணியில் மற்றொரு திரைப்படம் சினிமாவிற்கு கிடைத்திருக்கும்.