கேஸ் போட்டா.. நான் இதை பண்ணுவேன்.. அரசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த கருணாஸ்..! என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

தடியெடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்று ஒரு பழமொழி வழக்கில் உள்ளது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது போல தமிழகத்தில் இன்று யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பேசலாம் என்ற ரீதியில் பலரது பேச்சுக்கள் சிந்திக்கவும் சிலரது பேச்சுக்கள் கேலிக்கூத்தாகவும் வெளி வருகிறது.

அந்த வகையில் தற்போது கேஸ் போட்டா நான் இதை செய்வேன் என்று அரசை மிரட்டி இருக்கும் கருணாஸின் பேச்சு இணையம் எங்கும் வைரலாக பரவி வருகிறது.

கேஸ் போட்டா நான் இதை பண்ணுவேன்..

நகைச்சுவை நடிகரான கருணாஸ் லொடுக்குப்பாட்டி என்ற கேரக்டரை செய்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர். இவர் தற்போது யார் யார் லிஸ்டில் இணைந்து இருக்கிறார் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

எஸ்வி சேகர் மோசமான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் சொல்லி வருவது போல, எச் ராஜா பல படிகள் மேலே போய் உயர் நீதிமன்றம் காவல்துறையை பற்றி மோசமாக பேச தற்போது இவர்களது லிஸ்டில் தான் எம்எல்ஏ கருணாசும் இணைந்து இருக்கிறார்.

இதனை அடுத்து சும்மாவா இருக்கும் காவல்துறை மேற்கூறிய மூவர் மீதும் பல்வேறு வகைகளில் வழக்குகளை பதிவு செய்த நிலையில் தனிப்படை அமைத்து எப்போதும் போல் இந்த நிமிடம் வரை கைது செய்யாமல் தேடி வருகிறார்களோ என்னவோ தெரியவில்லை.

அந்த வகையில் அந்தத் தனி படை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க தனியாக ஒரு தனிப்படையை அமைக்க வேண்டுமா? என்று கிண்டல்கள் எழுந்துள்ளது.

அரசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த கருணா..

அது மட்டுமல்லாமல் அந்த மூன்று நபர்களும் எப்படி தப்பிக்கிறார்கள். அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி பலரும் பல்வேறு வகைகளில் பேசி வரக்கூடிய சூழ்நிலையில் எஸ்வி சேகர் மற்றும் ராஜா இருவருமே மத்தியில் செல்வாக்கு உடைய பிரமுகர்கள் என்பதால் பகைத்துக் கொண்டால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று தயக்கம் காட்டுகிறார்களா? என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இழந்துள்ளது.

இதனை சரியாகப் பிடித்துக்கொண்ட கருணாஸ் பெண்களை வைத்து எஸ்வி சேகர் மோசமாக பேசினார். மதத்தை வைத்து பிரச்சனையை ராஜா உண்டாக்க முயற்சி செய்கிறார். ஜாதியை வைத்து கொந்தளிப்பை ஏற்படுத்த கருணாஸ் முயற்சி செய்து இருக்கிறார்.

அந்த வகையில் மூவருமே கிட்டத்தட்ட சமூக நீதிக்கு புறம்பாக நடந்து உள்ளார்கள். எனினும் முதல்வரே நான் அடிப்பேன் என பயப்படுவதாக கருணாஸ் ஒரு படி மேலே போய் பேசி இருப்பது எந்த தைரியத்தில் வந்தது என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

என்ன சொல்லி இருக்கார் பாருங்க..

அப்படி முதல்வரையே நான் அடிப்பேன் என்ற பயம் நம் முதல்வருக்கு ஏற்பட்டு உள்ளதாக கருணாஸ் பேசிய பேச்சு அண்மை பேட்டியில் அரங்கேறி உள்ளதை அடுத்து கருணாசுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கருணாஸ் கூறிய ஒரு முக்கியமான வார்த்தை என்னவென்றால் கூவத்தூர் விடுதியை ஏற்பாடு செய்தது தான் அதன் காரணமாகத் தான் இந்த ஆட்சி இருக்கிறது என்று கூறிய விஷயம் அத்தோடு நிற்கவில்லை.

அதையும் தாண்டி கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை தேவைப்பட்டால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் மனுவாக அளிக்க தயாராக உள்ளதாக கூறிய கருணாஸ் ஏற்கனவே ஆட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் பலம் கம்மியாக இருப்பதால் வழக்கின் முடிவை பொருத்து தான் தமிழக அரசியல் அடுத்த கட்டம் நகரும் என்பதையும் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து எந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் எச் ராஜா, எஸ் வி சேகரின் பாணியை கருணாஸ் கையில் எடுத்து அரசை பயம் காட்டி மிரட்டி பேசி வருவதாக சொல்லி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சட்ட ஒழுங்கு இதன் மூலம் கெட்டுவிட்டது என்று கூட கூறி ஆட்சியை கலைக்க முடியுமா? என்ற கோணத்தில் அனைவரும் பேசி வருவது தற்போது பேசும் பொருளாகிவிட்டது.