என் மகனே என்னை தே*** சொல்லும் போது.. அதனால்.. நடிகை நதியா எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் கூட ஒரு முக்கியமான இயக்குனராக அனைவராலும் அறியப்படுபவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.

அவரது முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் திரைப்படத்திலேயே சிறப்பான படபிடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மற்றொரு திரைப்படம்தான் சூப்பர் டீலக்ஸ்.

நடிகை நதியா..

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் படம் வெளியான பிறகு அந்த படம் குறித்து சர்ச்சைகள்தான் அதிகமாக இருந்தது. முக்கியமாக திருநங்கைகள் குறித்து அந்த திரைப்படத்தில் மோசமான காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக அப்போது பேச்சுக்கள் இருந்து வந்தன.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை பொறுத்தவரை பல கதைகள் ஒன்றிணைந்து செல்லும் ஒரு திரைப்படமாக அந்த படம் இருந்தது. இந்த எல்லா கதைகளும் ஏதோ ஒரு இடத்தில் ஒன்று சேர்வது போல படத்தின் கதை இருக்கும். இதில் விஜய் சேதுபதி, பகத ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.

இதில் ரம்யா கிருஷ்ணன் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரமாக நடித்திருந்தார். அந்த மாதிரி திரைப்படங்களில் நடிக்க கூடிய ஒரு பெண்ணாக அதில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை நதியா என்பது ஆச்சரியமான தகவலாகும்.

என் மகனே என்னை..

நதியா படத்தின் கதையை கேட்டதுமே பிடித்து அதில் நடிக்க தொடங்கினார். ஆனால் படத்தின் கதை சொல்ல செல்ல ஒரு இடத்தில் அந்த கதாபாத்திரத்தின் மகனே அவரை தே*** என்று அழைக்கும் காட்சி இருந்தது. அந்த காட்சி நதியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து என் மகனே என்னை தே*** என அழைக்கும் பொழுது அதற்கு எப்படி பதில் அளிப்பது என்று எனக்கு புரியவில்லை. அதனால் இந்த திரைப்படத்தில் இருந்து விலகுகிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை நதியா. நடிகை நதியாவை பொறுத்தவரை சினிமாவிற்கு வந்த ஆரம்பகாலத்தில் இருந்து அவர் கவர்ச்சியாக நடித்தது கிடையாது.

அதிரடி முடிவு..

சினிமாவில் அவருக்கு என்று ஒரு நல்ல பெயர் இருந்து வருகிறது. மோசமான காட்சிகளில் நடிக்காத நதியா இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அவரது பெயரை இழந்து விடும் அபாயம் இருந்தது. இதனை புரிந்து கொண்ட நதியா ஆரம்பத்திலேயே இந்த திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திரும்ப கொடுத்துவிட்டார். அதற்கு பிறகுதான் அந்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.