அதை காட்டுனது போதும்.. இதையும் காட்டுங்க.. நெட்டிசனுக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதில்..!

தமிழ் சினிமாவில் மாஸ்டர் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். மாளவிகா மோகனன் ஆரம்பத்தில் மலையாளத்தில்தான் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் மலையாள திரைப்படத்தை விடவும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் மார்க்கெட் அதிகமாக இருப்பதை மாளவிகா மோகனன் அறிந்தார். அதேபோலவே சம்பள விஷயத்திலும் மலையாளத்தை விடவும் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது.

மாளவிகா மோகனன்

இந்த ஒரு காரணத்தினால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முயற்சி செய்யத் தொடங்கினார் மாளவிகாமோகனன். இந்த நிலையில் அவருக்கு முதன் முதலில் பேட்ட திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே ரஜினி திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் ஓரளவு வரவேற்பையும் பெற்றார் மாளவிகா மோகனன்.

பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு மனைவி கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு மாஸ்டர் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் திரைப்படத்திலேயே அவருடைய நடிப்பு அதிக விமர்சனத்திற்கு உள்ளானது.

நிறைய காட்சிகளில் மாளவிகா மோகனன் ஒழுங்காக நடிக்கவில்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இருந்தாலும் தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் மாளவிகா மோகனனுக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

அதை காட்டுனது போதும்..

தொடர்ந்து தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா மோகனன். அதற்குப் பிறகு தற்சமயம் தங்கலான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். தங்கலான் திரைப்படத்திற்காகதான் வெகுவாக கஷ்டப்பட்டு இருக்கிறார் மாளவிகா மோகனன்.

அந்த திரைப்படத்தில் அவருக்கான மேக்கப் வேலைகள் மட்டுமே நான்கு மணி நேரம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு அந்த மேக்கப்புடன் நடிப்பது என்பது இன்னமும் சிரமமாக இருந்தது என்று அவர் பேட்டிகளில் கூறியிருந்தார்.

இதையும் காட்டுங்க..

மேலும் அந்த படத்தில் படம் முழுக்க மேலாடை இல்லாமல் நடிக்க வேண்டும் என்று கூறியதும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது என்று கூறியிருக்கிறார் மாளவிகா மோகனன். இந்த நிலையில் இத்தனை திரைப்படங்களில் நடித்த பிறகும் கூட மாளவிகா மோகனின் நடிப்பு மட்டும் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகிதான் வருகிறது.

அவருக்கு சரியாக நடிக்க வரவில்லை என்று ஒரு சிலர் பேசி வருகின்றனர் இந்த நிலையில் ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனனிடம் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது ப்ரோமோஷன்களில் ஈடுபடுவது போன்றவற்றை விட்டு எப்பொழுது நடிப்பின் மூலமாக பார்வையாளர்களை கவர போகிறீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன் உங்களது கவனத்தை ஈர்க்க நான் நடிப்பை கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் இந்த பதிவு ட்ரெண்டாக துவங்கியிருக்கிறது.