வெறித்தனமாக யோகா செய்யும் சீரியல் நடிகை.. வைரலாகும் வேற லெவல் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான பரீனா அசாத் முதன் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கை துவங்கினார் .

அதன் பிறகு விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார் .

சீரியல் நடிகை:

சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற தமிழ் சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானார். பின்ன ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனாராம்.

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அவர் புகழ் பெற்று நடிகையாக பார்க்கப்பட்டார். அந்த சீரியலில் வில்லி ரோலில் அசத்தியிருப்பார்.

மேலும் இவர் நாச்சியார்புரம், அபி டெய்லர், பாரதிகண்ணம்மா, கலக்கப்போவது யாரு, சாம்பியன் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வில்லியாக அசத்திய பரீனா:

வில்லி கதாபாத்திரங்களுக்கு தத்ரூபமாக பொருந்தும் நடிகையான பரீனா ஆசாத் பாரதி கண்ணம்மா தொடர் பெரும் அடையாளமாக பார்க்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு தனது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் ரகுமான் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகனும் இருக்கிறார்.

குழந்தை பிறப்புக்கு பிறகு சில காலம் மட்டுமே ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் மீண்டும் தொலைக்காட்சிகளில் தென்பட ஆரம்பித்தார்.

வெறித்தனமாக யோகா:

சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகை வலம் வந்து கொண்டு இருக்கும் அவர் சமூக வலைதளங்களில் தனது கிளாமரான போட்டோக்களை வெளியிடுவதில் எப்போதும் தயங்குவதில்லை.

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் யோகாசன புகைப்படங்கள் தான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

உடலை வளைத்து நெளித்து வெறித்தனமாக யோகா செய்யும் இந்த புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் .

இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் எல்லாரும் மிரண்டு போய் விட்டார்கள். இந்த புகைப்படம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.