25 ஆடிஷனில் என்னை பார்த்து இதை சொன்னார்கள்.. ஆனால்.. இன்று.. நடிகை ராஷ்மிகா உணர்ச்சிவசம்..!

கீதா கோவிந்தம் திரைப்படம் மூலமாக தென்னிந்தியா முழுவதும் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமான பொழுது அவருக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைத்தது. அதே சமயம் தென்னிந்தியாவில் அதிகமான விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகையாகவும் ராஸ்மிகா இருந்து வருகிறார்.

அதற்கு முக்கிய காரணம் தென்னிந்தியாவிலேயே குறைந்த காலகட்டத்தில் எந்த நடிகையும் அடையாத அளவிற்கான வரவேற்பையும் புகழையும் பெற்றார் ராஷ்மிகா மந்தனா. ஒரு கட்டத்தில் இந்தியாவின் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்பட்டார்.

ராஷ்மிகா

இது பல நடிகைகளுக்குமே கோபத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ராஷ்மிகா குறித்து நிறைய தவறான தகவல்களும் பரவ துவங்கின. தொடர்ந்து அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகையாக ராஸ்மிகா மாறினார்.

இதனாலேயே தொடர்ந்து சமூக வலைதளங்களில் ராஸ்மிகா தன்னை விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு பதில் அளித்து வீடியோக்களை வெளியிடுவதை  வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்தார்.

25 ஆடிஷனில்

கீதா கோவிந்தம் திரைப்படம் ஓரளவு இவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. கீதா கோவிந்தம் திரைப்படம் மூலமாகதான் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

அந்த திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது. முதன்முதலாக தமிழில் ராஸ்மிகா நடித்த திரைப்படம் சுல்தான். இந்த திரைப்படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்தார். அதற்கு பிறகு வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

ஆனால்.. இன்று..

மொத்தமே இந்த இரண்டு திரைப்படங்கள் மட்டும்தான் நேரடியாக இவர் தமிழில் நடித்த படங்கள். மற்றவை எல்லாம் இவர் தெலுங்கில் நடித்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட திரைப்படங்கள் தான். தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா மந்தனா இருந்து வருகிறார்.

அவர் நடித்த புஷ்பா திரைப்படம் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பு பெற்று இருக்கிறது. இதன் மூலமாக பாலிவுட் பிரபலம் ஆகி அங்கு அனிமல் என்கிற ஒரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் அவர் கூறும்பொழுது என்னை நடிகை போலவே இல்லை என்று கூறி 20 முதல் 25 ஆடிசன்களில் நிராகரித்தனர்.

அந்த நிராகரிப்புகளை கடந்து வந்த பிறகுதான் இப்படியான உயரத்தை தொட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அதேபோல ஆரம்பத்தில் பார்ப்பதற்கு மிகவும் சின்ன பெண்ணாகதான் தெரிந்தார் ராஷ்மிகா மந்தனா.