அவ ஓடிப்போயிட்டா.. நீ கெளம்பி வா.. அழைத்த இயக்குனர்.. சங்கீதா கொடுத்த பதில்..!

தமிழ் திரை உலகில் 90 காலகட்டத்தின் இறுதியில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை சங்கீதா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் திரை உலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தமிழ் திரை உலகில் பின்னணி பாடல்கள் பலவற்றை பாடி இருக்கும் பாடகர் கிரிஷ்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவ ஓடிப்போயிட்டா நீ கிளம்பி வா..

சென்னையில் பிறந்து வளர்ந்த சங்கீதா உயிர், பிதாமகன், தனம் போன்ற தமிழ் திரைப்படங்களில் பக்காவாக தனது நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் பிதாமகன் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை பக்குவமாக சொல்லிய இவர் தன்னிடம் இயக்குனர் பாலா எப்படி நடந்து கொண்டார் என்பதை பற்றி ரசனையோடு சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இயக்குனர் பாலா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் பாலாவின் படங்கள் என்றாலே ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்த வகையில் பிதாமகன் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து youtube சேனலான பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகை சங்கீதா அப்போதைய காலகட்டத்தில் தெலுங்கு படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததாகவும் கிட்டத்தட்ட ஒன்பது படங்களுக்கு மேல் அவர் கைவசம் இருந்ததாகவும் சொல்லியிருந்தார்.

மேலும் தமிழ் படங்களில் போதிய அளவு வரவேற்பு கிடைக்காததை அடுத்து சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் பெரிய ஹீரோ ஆன விஷயம் கூட தெரியாமல் இருந்ததாக சொல்லி இருக்கிறார்.

சங்கீதாவை அழைத்த இயக்குனர்..

இந்த நிலையில் தான் பிதாமகன் திரைப்படத்தில் நடிப்பதற்காக தன்னை கேட்டதாகவும் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததின் காரணத்தால் தேதியில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து நடிக்க முடியவில்லை.

இதை அடுத்து அந்த படத்தில் பல நடிகைகள் அந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று நடித்த போதும் இயக்குனர் பாலாவுக்கு திருப்தி ஏற்படாததை அடுத்து பல ஹீரோயின்களை வேண்டாம் என்று திருப்பி அனுப்பி வைத்து விட்டார்.

அந்த சமயத்தில் தான் எனக்கு வேறொரு படத்தில் நடித்ததற்காக ஃபிலிம் பேர் விருது சிறந்த நடிகைக்காக கிடைத்தது. இந்த விருதை நான் வாங்கிய போது என் குரு வம்சி சார் அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கக்கூடிய விதமாக அடுத்தடுத்த படங்களில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருப்பதோடு இயக்குனர் பாலா என்னை நடிக்க அழைத்திருக்கிறார். ஆனால் தேதி இல்லாததால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறினேன்.

இதைக் கேட்ட உடனே கோபப்பட்ட வம்சி பாலா சார் படத்தை நீ எப்படி மிஸ் செய்வாய்? உடனடியாக போன் செய்து மன்னிப்பு கேள். உடனே நான் அவரிடம் தேதி இல்லை என்று சொல்ல பாலா படத்தில் நடிக்க நீ தான் தேதிகளை உருவாக்க வேண்டும் என்று கோபப்பட்டார்.

இந்நிலையில் நான் மீண்டும் பாலா சார் க்கு போன் செய்து விருது வாங்கிய விஷயத்தை கூறினேன் அதற்கு அவர் ஆங்..அப்புறம் என்று அலட்சியமாக பேசினார்.

நடிகை சங்கீதா கொடுத்த பதில்..

மேலும் வம்சி சார் தன்னை கூப்பிட்டு கோபப்பட்ட விஷயத்தையும் சொல்லி எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள். எனக்கு வேலை கற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது. அதுவும் உங்கள் கையில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்று சொன்னேன்.

அதற்கு அவர் இப்போது என்ன செய்யற என்று கேட்க அதற்கு நான் பாலகிருஷ்ணா சார் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தின் செட்யூல் கேன்சலாகி இருந்தது. இதை அடுத்து நான் சென்னை வருகிறேன் என்பதையும் கூறினேன்.

உடனே அவர் என்னை மதுரைக்கு வா என்று சொன்னார். எனக்கு பதிலா வேறொரு பெண் அந்த படத்தில் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் வேலையை கெடுத்துக் கொண்டு நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன் என்று சொன்னேன்.

உடனே அதற்கு அவர் இந்த வியாக்கியானம் எல்லாம் உன்னிடம் நான் கேட்கவில்லை கிளம்பி வா என்றார். இதனை அடுத்து நான் மதுரைக்கு சென்ற பிறகு பிதாமகன் படத்தில் நடித்த அப்போது பாலா சார் பற்றி பல விஷயங்களை புரிந்து கொண்டேன்.