சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஆர்.ஜே.ஆனந்தி..! குவியுது லைக்ஸ்..!

முன்பெல்லாம் மக்கள் மத்தியில் நடிகைகள் பிரபலமாவதற்கு சினிமா மட்டுமே ஒரே விஷயமாக இருந்து வந்தது. தொலைக்காட்சிகள் அதிகமாக பரவ தொடங்கிய பிறகு சின்னத்திரை என்பது நடிகைகளுக்கு ஒரு முக்கிய விஷயமாக மாறியது.

தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்காத நடிகைகள் சின்னத்திரையில் நடித்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கினர். ஆனால் இப்பொழுது மக்கள் மத்தியில் பிரபலம் அடைவது என்பதே எளிதான விஷயமாகிவிட்டது.

நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி:

ஒரு யூ ட்யூப் சேனல் துவங்கினாலே போதும். அதன் மூலமாக தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக முடியும். இந்த நிலையில் யூ ட்யூப் பிரபலங்கள் என்கிற ஒரு தனி கூட்டமே இப்பொழுது உருவாகி இருக்கிறது. அவர்களுக்கு சினிமா சின்னத்திரை என்று அனைத்து வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாக கிடைத்து வருகிறது.

அப்படியாக யூ ட்யூப் சேனல் மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்தவர் ஆர்.ஜே ஆனந்தி ஆரம்பத்தில் ரேடியோவில் வேலை பார்த்து வந்தார் ஆர்.ஜே ஆனந்தி. அதற்கு பிறகு அவருக்கு youtube சேனல்களின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

ஆர்.ஜே.ஆனந்தி

மக்கள் மத்தியில் பிரபலமடைய நினைத்தார். ஏனெனில் ரேடியோ ஜாக்கியாக இருந்த காரணத்தினால் சிறப்பாக பேசக்கூடியவர் ஆனந்தி அவரது வீடியோக்களில் எல்லாம் விடாமல் அவர் பேசுவதை பார்க்க முடியும். சாதாரணமாக அப்படி பலருக்கும் பேசுவதற்கு வராது.

அதனாலயே யூடியுப் சேனல்களில் தமிழில் தோல்வி அடைந்த திரைப்படங்கள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட தொடங்கினார் ஆர்.ஜே ஆனந்தி தமிழில் மிக மோசமாக எடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறாமல் போன சில திரைப்படங்கள் இருக்கும்.

அவற்றின் பெயர் கூட மக்களுக்கு தெரியாது அந்த திரைப்படங்களை எல்லாம் கலாய்த்து வீடியோ வெளியிடுவதை ஆர்.ஜே ஆனந்தி வேலையாக கொண்டிருந்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற தொடங்கினார்.

குவியுது லைக்ஸ்

இதனால் அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கின. நிறைய திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த நிலையில் கோமாளி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆர்.ஜே ஆனந்தி.

இப்பொழுது அவர் புத்தகங்கள் குறித்த விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதற்கு வரவேற்புகளும் கிடைத்து வருகின்றன இந்நிலையில் ஆர்.ஜே ஆனந்தி சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அவற்றை பார்த்த பலரும் ஆனந்தி சினிமாவிற்கு வந்து ஏன் கதாநாயகியாக நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.  அந்த அளவிற்கு அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.