நான் தோத்துப்போனதுக்கு காரணம் இது தான்.. இதெல்லாம் நான் நடிக்க வேண்டிய படம்ங்க.. கதறும் அங்காடிதெரு ஹீரோ..!

வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2019 வெளிவந்த திரைப்படம் தான் அங்காடித்தெரு. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக மகேஷ் என்பவர் நடித்திருந்தார் .

அங்காடித்தெரு திரைப்படம்:

இந்த படத்திற்குப் பிறகு அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு அங்காடி தெரு படத்தில் நடித்த அனுபவம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மகேஷ்.

அதாவது… நான் தோத்து போனதுக்கு மிக முக்கியமான காரணமே இது தான்….பல சூப்பர் ஹிட் படங்களெல்லாம் நான் நடிக்க வேண்டிய படங்கள் என்று கூறி மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார் .

அதைப்பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்… எனக்கு கதை தேர்வில் கவனம் செலுத்த தெரியவில்லை.

எப்படி கதையை கேட்பது? தேர்வு செய்வது? எது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது? இதில் நடிக்கலாமா? இதில் நடிக்க கூடாதா? என்று தெளிவான புரிதல் கூட எனக்கு அப்போதைக்கு இல்லை என கூறினார் .

நடிகர் மகேஷ்:

உடனே தொகுப்பாளர்…. அங்காடித்தெரு படத்தில் நடிக்கும் போதும் உங்களுக்கு அவ்வளவு பெரிய அனுபவம் ஏதும் இருந்திருக்காது. அந்த படத்தை மட்டும் எப்படி தேர்வு செய்தீர்கள்? என கேட்டதற்கு…

நான் அந்த படத்தின் கதையை கூட உண்மையில் சொல்லப்போனால் கேட்கவே இல்லை. எல்லாவற்றையும் வசந்த பாலன் சாரே பார்த்துக் கொண்டார்.

அவரே கதையை தயார் பண்ணிக்கொண்டு அவரை எப்படி நடிக்க வேண்டும் என்பது முதல் எல்லாவற்றையும் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

நான் தோத்துப்போனதுக்கு காரணம் இது தான்:

அதனால் அந்த பட்டம் ஹிட் அடித்தது. அந்த படத்திற்கு பிறகு எனக்கு கதையை தேர்வு செய்ய தெரியவில்லை. இதுதான் நான் தோற்றுப் போனதுக்கு மிக முக்கியமான காரணம் நானே தான்.

கதை எப்படி தேர்வு செய்வதில் புரிதல் இல்லாததால் தான் நான் தோற்றுப் போனேன் என வெளிப்படையாக கூறினார் மகேஷ்.

அங்காடித்தெரு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பெரிய நடிகர்கள் பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதையெல்லாம் ஏன் தவறவிட்டீர்கள்? என கேட்டதற்கு….

எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்த உடனே நான் கமிட் ஆகிவிட்டேன். இதனால் எனக்கு நல்ல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும்போது என்னால் அதில் கமிட்டாகி நடிக்க முடியவில்லை.

அவர்களுக்கு டேட் கொடுக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்ட சிக்கல்தான் எனக்கு நல்ல பட வாய்ப்புகள் பறிபோனது. அப்படி நான் நடிக்க வேண்டிய திரைப்படங்கள் தான் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் .

இந்த திரைப்பட வாய்ப்பு முதலில் எனக்கு தான் கிடைத்தது. சீனு ராமசாமி சார் என்கிட்ட அதோட கதையை முன்னாடியே சொல்லிட்டாரு. என்னால அந்த படத்திற்கு டேட் கொடுக்கவில்லை.

கைநழுவிப்போன படங்கள்:

எனவே இதனால் முதலில் என் கை நழுவி போன படம். அந்த படம் தான் என மகேஷ் கூறினார். மேலும் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஷர்வா சார் கேரக்டரில் நான் தான் நடிப்பதாக இருந்தேன்.

அதுவும் கைக்கு வந்த நேரத்தில் நழுவி போய்விட்டது எனக்கு கூறினார். இதுபோல் தொடர்ந்து நல்ல நல்ல திரைப்பட வாய்ப்புகள் கைநழுவி போனதால் நான் மார்க்கெட்டை இல்லாமல் போய்விட்டேன்.

அந்த சமயத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். எனவே அது குறித்து வெளிவந்த செய்திகள் எல்லாம் உண்மைதான் என மகேஷ் ஒப்புக்கொண்டார்.

வெற்றி என்பது என் வாழ்க்கையில் முதலிலே கிடைத்து விட்டது. ஆனால் அதை தக்க தக்க வைத்துக் கொள்ளும் திறமையும் மனப்பக்குவமும் எனக்கு அப்போதைக்கு இல்லை.

இப்போ நான் ஏன் தோற்றேன் என்பதை மிகவும் தெளிவாக புரிந்து கொண்டு அதற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டு மீண்டும் வெற்றியை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளேன் என்ற மகேஷ்.

மகேஷின் இந்த வெளிப்படையான பேச்சை கேட்ட ரசிகர்கள் மீண்டும் அவர் திரைத்துறையில் நல்ல நடிகராக வர வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.