வேட்டையன் அறிவிப்பால் இப்ப பஞ்சாயத்து ஆரம்பிச்சுருக்கு.. ஏற்கனவே வாயை விட்ட தயாரிப்பாளர் நிலை என்ன?.

ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் அதிகப் புகழ் அடைந்தவர் இயக்குனர் தா.சே ஞானவேல். இவர்து இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம்தான் வேட்டையன். ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவை வைத்துதான் திரைப்படத்தை இயக்க இருந்தார் இயக்குனர் ஞானவேல்.

ஆனால் சூர்யா அதற்குள்ளாக கங்குவா திரைப்படத்திற்கு நடிக்க சென்று விட்டதால் இவர் ரஜினியை வைத்து வேட்டையன் திரைப்படத்தை தொடங்கினார். கிட்டத்தட்ட வேட்டையன் திரைப்படத்தின் வேலைகள் துவங்கி இரண்டு வருடங்களாக அதன் மொத்த விஷயங்களும் நடந்து இருக்கின்றன.

வேட்டையன் படம்:

படப்பிடிப்பு மட்டும் ஒரு வருடத்திற்கும் அதிகமாக நடந்திருக்கிறது. அந்த அளவிற்கு இந்த படத்தில் விஷயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வேட்டையன் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே லைக்கா நிறுவனம் அறிவித்து இருந்தது.

ஆனால் எந்த தேதியில் வெளியாகும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கு நடுவே ஏற்கனவே தயாராகி வந்த கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்சமயம் வேட்டையன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

பஞ்சாயத்து ஆரம்பிச்சுருக்கு

இது இரண்டு திரைப்படங்களுக்குமே வசூல் ரீதியாக பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் இரண்டு படமுமே கொஞ்சம் அதிகபட்ஜெட்டில்தான் எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் கங்குவா மிக அதிகபட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் கங்குவா திரைப்படத்தை தயாரித்து வருகிறார். ஞானவேல் ராஜாவிடம் ஒருவேளை உங்களது திரைப்படம் வெளியாகும் நாளிலேயே வேட்டையன் படமும் வெளியானால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது.

வாயை விட்ட தயாரிப்பாளர்

அதற்கு பதில் அளித்த ஞானவேல் ராஜா அப்படி நடக்க வாய்ப்பில்லை ஒருவேளை அப்படி எங்கள் படத்திற்கு போட்டியாக வேட்டையன் வெளியானால் நான் படம் வெளியிடும் தேதியை மாற்றி வைத்து விடுவேன் ஏனெனில் ரஜினியோடு போட்டி போட்டு ரிஸ்க் எடுக்க முடியாது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் அதேபோல வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு ஞானவேல் ராஜா என்ன செய்யப் போகிறார் அவர் உண்மையிலேயே தாங்குவா படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி வைப்பாரா என்று கேள்விகள் எழுந்து வருகின்றன.

வேட்டையன் திரைப்படத்தை பொறுத்தவரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். படத்தில் ஆக்ஷன் வேண்டும் என்பதற்காக முதல் பாதி முழுக்க சண்டை காட்சிகளாகவும் அடுத்த பாதையில் என்கவுண்டருக்கு எதிரான விஷயங்களை பேசி இருப்பதாகவும் கருத்துக்கள் நிலவி வருகின்றன.