அட.. என்னடா சொல்றீங்க.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்சன் திலீப்குமார் மனைவிக்கு தொடர்பா?.. முடிக்கி விடப்பட்ட விசாரணை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டது என்று சொல்லலாம்.

இந்தப் படுகொலையை கண்டித்து பலரும் கண்டன குரல்களை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் இந்த கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை கோரிக்கைகளாக முன் வைத்தார்கள்.

கொலையில் இயக்குனர் நெல்சன் மனைவிக்கு தொடர்பா?

இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் பலர் கைது செய்யப்பட்டதை அடுத்து விசாரணை வேறு வகையில் படு வேகமாக சென்று கொண்டிருந்ததை அடுத்து இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்படி மனைவியிடம் நடத்தி முடித்த விசாரணை அடுத்து இயக்குனர் நெல்சன் இடமும் விசாரணை நடக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் கொலை செய்யப்பட்ட கொலை சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அரசியல் பிரமுகர் என்பதால் திமுக ஆட்சி மீது பலர் கண்டனத்தை முன் வைத்ததோடு சட்ட ஒழுங்கு கெட்டி விட்டதாக சொல்லியிருந்தார்கள். ஏற்கனவே தன் பாதுகாப்புக்காக ஆம்ஸ்ட்ராங் லைசன்ஸ் லைசன்ஸ் பெற்று துப்பாக்கி ஒன்றை வைத்து இருந்தார். அதனை தேர்தல் சமயத்தில் ஒப்படைத்து இருக்கிறார்.

இதை அறிந்து கொண்டு தான் முன்விரோதம் காரணமாக கூலிப்படை அவரை நோட்டமிட்டு வந்ததை அடுத்து வீட்டில் தக்க சமயத்தில் அந்த சம்பவத்தை அரங்கேற்றியது.

இந்த கொலை சம்பந்தமாக சுமார் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆற்காட்டு சுரேஷின் மனைவி பொற்கொடி ஆந்திராவில் பதுங்கி இருந்ததை அடுத்து அவரும் சொந்த ஊருக்கு வர கைது செய்யப்பட்ட விஷயம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாகவும் மொட்டை கிருஷ்ணன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி இருப்பதை கண்டுபிடித்து போலீசார் அவரிடமும் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

மொட்டை கிருஷ்ணனோடு பேச்சு எதற்கு?

இதனை அடுத்து தான் மொட்டை கிருஷ்ணனோடு பேசியது எதற்கு என்பதை இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா போலீஸ் அதிகாரியிடம் ஒரு வழக்கு தொடர்பாக பேசியதாக கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கு தொடர்பாக நெல்சனின் மனைவியை அடுத்து இயக்குனர் நெல்சன் இடமும் விசாரணை நடத்தப்படுவதற்கான முகாந்திரம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே இயக்குனர் நெல்சனை விசாரிக்க அதற்கான சமனை காவல்துறையினர் கொடுக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ள நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு நெல்சனின் மனைவிக்கு அதில் தொடர்பு இருக்கிறதா? என்ற ரீதியில் வழக்கு திசை மாறி இருப்பது திரைத்துறையில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முடிக்கி விடப்பட்ட விசாரணை..

இதனை அடுத்து உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த தேடல் முயற்சி முடிக்கி விடப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே விரைவில் ஆம்ஸ்ட்ராங்கை யார் கொலை செய்தார்கள் என்ற விஷயம் வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்படும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

அத்தோடு இதுவரை போதை பொருட்களின் விவகாரத்தில் மட்டுமே திரைத்துறையின் பெயர் அடிபட்ட வேளையில் தற்போது அரசியல் பிரமுகர் ஒருவரது கொலை வழக்கிலும் முன்னணி இயக்குனர் மற்றும் அவரது மனைவியின் பெயர் அடிபட்டு இருப்பது திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.