எனக்கு எப்போதுமே இருந்த அந்த வருத்தம் ஆந்திர ரசிகர்களால் சரியானது.. ஓப்பன் டாக் கொடுத்த விக்ரம்!..

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் உயிரைக் கொடுத்து நடிக்கக் கூடியவர்களாக இருந்து வருகின்றனர். சாதாரண திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடித்து நிறைய சம்பாதித்து விட்டு செல்லலாம் என்று இல்லாமல் தொடர்ந்து மக்களுக்கு வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அப்படியான நடிகர்களில் நடிகர் விக்ரம் முக்கியமானவர். நடிகர் விக்ரமும் கூட சண்டை காட்சிகள் கொண்ட சாமி, அருள், தூள் மாதிரியான திரைப்படங்களில் நடிக்க கூடியவர்தான் என்றாலும் கூட அதே சமயத்தில் அவ்வப்போது வித்தியாசமான திரைப்படங்களிலும் களமிறங்கக்கூடியவர் விக்ரம்.

சீயான் விக்ரம்:

அதிகபட்சம் விக்ரம் நடிக்கும் திரைப்படங்களின் கதைகளை எல்லாம் பார்த்தால் வேறு நடிகர்கள் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறலாம். இயக்குனர் பா.ரஞ்சுத்தும் இதுக்குறித்து கேட்கும் பொழுது சீயான் விக்ரம் நடிக்கவில்லை என்றால் யாரை நடிக்க வைத்திருப்பீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த பா.ரஞ்சித் சியான் விக்ரமைத் தவிர வேறு யாராலும் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் விக்ரம் என்றாலும் கூட சில படங்கள் அவருக்கு தோல்வியடையும் பொழுது அதற்கு அவர் வெளிப்படுத்திய நடிப்பும் உழைப்பும் வீணாகி விடுகிறது.

இருந்த அந்த வருத்தம்

அதனால் அவருக்கு அதிக மன வருத்தம் ஏற்படுவதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். உதாரணத்திற்கு கோப்ரா திரைப்படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்ததாகவும் சில கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக நடித்திருந்ததாகவும் கூறினார் விக்ரம்.

ஆனால் அந்த திரைப்படம் வெற்றிபெறவில்லை என்கிற காரணத்தினால் அந்த கதாபாத்திரங்களுக்கும் வரவேற்பு கிடைக்காமல் போய்விட்டது என்று கூறியிருந்தார். இதே போல இன்னொரு பேட்டியில் அவர் கூறும் பொழுது மகான் திரைப்படம் குறித்து கூறியிருந்தார்.

ஓப்பன் டாக் கொடுத்த விக்ரம்

மகான் திரைப்படம் வெளியான பொழுது அது ஓடிடியில் ன் வெளியானது திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதனால் அது மக்கள் மத்தியில் என்ன மாதிரியான வரவேற்பை பெற்றது என்று எனக்கு தெரியவில்லை. நான் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்று நினைத்து வந்தேன்.

 

அதனால் யார் கேட்டாலும் ஆமாம் மகான் என்று ஒரு படத்தில் நடித்தேன் என்று சொல்லுவதோடு நிறுத்திக் கொண்டு வந்தேன். பிறகு ஆந்திராவில் ஒரு நேர்காணலில் இருந்த பொழுது ரசிகர்கள் மகான் திரைப்படத்தை மிகவும் சிலாகித்து பேசினர். அதற்குப் பிறகு நிறைய மேடைகளில் நான் செல்லும் பொழுது நான் நடித்த படங்களில் மகான் படத்தையும் இணைத்து கூறினேன்.

மகான் படத்தை கூறும்போது மட்டும் கைதட்டல்கள் அதிகமாக இருந்தது வெகு நாட்களாக என் மகனோடு சேர்ந்து நடித்த முதல் படம் வெற்றி பெறவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த வருத்தத்தை ஆந்திர மக்கள் தான் போக்கினர் என்று கூறியிருக்கிறார் நடிகர் விக்ரம்.