சாதிய வன்மம் பேப்பர் கப்பில் எதிரொலிக்குது.. நெகட்டிவ் விமர்சனத்திற்கு சவுக்கடி கொடுத்த பா ரஞ்சித்..

இதுவரை தமிழ் திரை உலகில் எப்படிப்பட்ட படத்தை பார்த்திருப்போமா என்று யாரும் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு பழங்குடி மக்களை மையமாகக் கொண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் தங்கலான் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித்தை பொறுத்த வரை அவரது ஒவ்வொரு படத்திலும் ஜாதிய வன்மத்தை தோல் உரித்து காட்டுவதில் கை தேர்ந்தவர் என்று சொல்லக்கூடிய விதத்தில் இந்த படத்திலும் அந்த வேலையை சம்பவமாக நிகழ்த்தி விட்டார்.

பா ரஞ்சித்தின் தங்கலான்..

சுதந்திர தினத்தன்று தியேட்டர்களில் வெளியான இந்த படத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்து இருந்தார்கள் என்று சொல்லலாம்.

மேலும் இந்த படத்திற்கு இசையமைத்திருந்த ஜிவி பிரகாஷ் மிக பக்குவமான முறையில் இசை அமைத்து படத்திற்கு பக்க பலமாக இருக்கக்கூடிய வகையில் முத்தான பாடல்களை கொடுத்து ரசிகர்களை ஆச்சிரியத்தில் இருக்கிறார்.

இந்த திரைப்படமானது உலகம் எங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உருவான நிலையில் ஹிந்தியில் மட்டும் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனை அடுத்து இந்த படம் பற்றி கலவை ரீதியான விமர்சனங்கள் வந்து குவிந்துள்ளது.

சாதிய வன்மம் பேப்பர் கப்பில் எதிரொலிக்குது..

இதுவரை இல்லாத அளவு நாகர்கள், பௌத்தம், பூர்வகுடி மக்கள் என கோலார் தங்க வயளை கதைக்களமாக கொண்டு பா ரஞ்சித் எழுதிய இயக்கிய இந்த படம் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து பாராட்டுதல்களை பெற்று வரக்கூடிய வேளையில் இவர் தான் எதைக் கூற வந்தாரோ அந்த கருத்தை சரியாக கூறிவிட்டார் என்று சிலரும் இல்லை அது சரியாக வெளிப்படவில்லை என்று பலரும் கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த படம் வெளி வருவதற்கு முன்பிருந்த பல்வேறு வகையான கருத்துக்கள் ஊடகங்களில் பேசும் பொருளாக மாறிய நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பா ரஞ்சித் இந்த படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இதில் சில தன்னிடம் நெகட்டிவ் ஆக ஜாதிய வன்மத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? வன்மத்தை கொட்டி காட்டுபவர்களிடம் சண்டை போட்டால் என்ன நடக்கும் என நினைக்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை வைத்தார்கள்.

நெகட்டிவ் விமர்சனத்திற்கு சவுக்கடி கொடுத்த பா ரஞ்சித்..

இதற்கு சாதிய வன்மத்தை விதைப்பவர்களின் நோக்கமே நம்மை போன்றவர்களை வீழ்த்த தானே நினைப்பார்கள். அப்படி நம்மை வீழ்த்த வேண்டிய அவசியம் என்ன? எதற்காக இப்படி வன்மத்தை கொட்டுகிறார்கள்? நேர்மையான முறையில் விமர்சனங்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் இப்படி பேசுவது தான் எனக்கு பிடிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கிறது அந்த அடிப்படையில் படம் பிடிக்கவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும் அப்போது நான் புரிந்து கொள்வேன்.

அதுமட்டுமல்லாமல் இன்று சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த படம் வந்துள்ளது. படத்தின் ரிலீஸ்க்கு முன்னரே நான் பேசிய பேப்பர் கப் குறித்து செய்திகள் வெகுவாக பரவியது.

அந்தப் பேப்பர் கப் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது இன்றும் கிராமங்களுக்கு சென்றால் உங்களுக்கு புரியும் என அந்த பேட்டியில் பேசி இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசப்படுவதோடு இளைஞர்களின் மத்தியில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.