எல்லா நடிகையுமே அட்ஜெஸ்ட்மெண்ட் செஞ்சிருக்காங்களா? புது அறிக்கையால் வந்த பிரச்சனை!. பதிலடி கொடுத்த நடிகை பார்வதி..

எல்லா மொழி சினிமாக்களிலுமே தொடர்ந்து இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது இருந்து வருகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மோசமாகவே இருந்து வருகிறது என்று கூறலாம்.

ஏனெனில் சில கேஸ்டிங் இயக்குனர்கள் இதுகுறித்து கூறும் பொழுதே கேஸ்டிங்காக பயோடேட்டா கொடுக்கும் பொழுதே அதில் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு தயார் என்று பெண்கள் எழுதி கொடுக்கும் அளவிற்கு இங்கு வெளிப்படையாக இருக்கிறது என்று கூறியிருந்தனர்.

எல்லா நடிகையுமே அட்ஜெஸ்ட்மெண்ட்

அதேபோல சினிமாவை சேர்ந்த நிறைய பிரபலங்களும் அதை வெளிப்படுத்தியும் இருக்கின்றனர். இப்படியாக சினிமா சீர்கெட்டு கொண்டிருப்பதாலே சினிமா துறையின் மீது பெரிதாக பொதுமக்களுக்கு நல்லவிதமான அபிப்ராயம் கிடையாது என்று கூறலாம்.

இதை ஒழுங்குபடுத்தவோ அல்லது நெறிப்படுத்தவோ அரசோ அல்லது வேறு யாருமோ முயற்சி செய்வது கிடையாது. நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் போன்றவை இருந்தாலும் கூட அவை அவற்றை மூடி மறைக்கவே செய்கின்றன என்று  சில நடிகைகளே கூறுகின்றனர்.

அறிக்கையால் வந்த பிரச்சனை

சில நடிகைகள் இப்படி சங்கங்களை அணுகியும் கூட நீதி பெறாமல் இருந்திருக்கின்றனர். பிக் பாஸில் ஒருமுறை நடிகை விசித்ரா பேசும் போது கூட அவருக்கு நடந்த அநீதியையும் பிறகு அதை சங்கத்திடம் சென்று கூறியும் அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டதையும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மலையாள சினிமாவில் இந்த பாலியல் தொல்லைகள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி என்கிற இந்த கமிட்டி மலையாள சினிமாவில் எந்த அளவிற்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் மற்றும் பாலியல் சீண்டல்கள் தலை விரித்து ஆடுகிறது என்பதை அறிவதற்காக அமைக்கப்பட்டது.

பதிலடி கொடுத்த நடிகை பார்வதி

ஆனால் அந்த கமிட்டி கொடுத்த அறிக்கைகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு விஷயமாக அமைந்திருக்கிறது. அதில் மலையாள சினிமாவில் பாலியல் ரீதியான சீண்டல்கள் தலைவிரித்து ஆடுவதாக அறிக்கை கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை பார்வதி இது குறித்து பதில் அளித்து இருக்கிறார். நடிகை பார்வதி தமிழிலும் நிறைய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் இதில் அவர் கூறும் பொழுது ஹேமா கமிஷனின் அறிக்கையை வைத்து சினிமா துறையில் உள்ள எல்லா பெண்களும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தவர்கள் என்பது போல பொத்தாம் பொதுவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

மேலும் அவர் நான் கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக இது பற்றி குரல் கொடுத்து வருகிறேன். இதனால் எனக்கு சினிமாவில் யாரும் வாய்ப்புகளே தருவதில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் மலையாளத்தில் பிரபல நடிகராக இருக்கும் டொவினோ தாமஸ் ஹேமா அறிக்கையில் ஒட்டுமொத்த கேரள சினிமாவையும் குற்றம் சாட்டி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.