அந்த நயன்தாரா இயக்குனர் கதையின் காப்பிதான் இந்த படம்.. சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்!.

தமிழ் சினிமாவில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி திரைப்படம் மூலமாக முதன்முதலாக இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார் பா.ரஞ்சித்.

அட்டகத்தி திரைப்படம் அவருக்கு வெகுவான வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் மெட்ராஸ். மெட்ராஸ் திரைப்படம் தமிழக அளவிலேயே பெரும் வரவேற்பு பெற்றுக்கொடுத்த படமாக இருந்தது.

கதையின் காப்பிதான்

அதற்கு பிறகுதான் பா.ரஞ்சித்தை பலருக்கும் அடையாளம் தெரிய துவங்கியது. அதற்கு பிறகு அவருக்கு ரஜினி வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ரஜினியை வைத்து காலா, கபாலி என்கிற படங்களை இயக்கினார் பா.ரஞ்சித்.

இந்த திரைப்படம் பண்ணை அடிமை முறையில் வெளிநாட்டில் சென்று பணிபுரியும் தமிழர்களின் நிலையை பேசும் படமாக அமைந்திருந்தது. அந்த திரைப்படத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து காலா திரைப்படத்தை இயக்கிய பா.ரஞ்சித் தற்சமயம் தங்கலான் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.

பா.ரஞ்சித் படங்கள்:

சில சமயங்களில் அவர் பேசும் நிறைய விஷயங்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தாலும் கூட ஒரு இயக்குனராக அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு ஓரளவு வரவேற்பு என்பதே தெரிந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில் பா.ரஞ்சித் குறித்து சர்ச்சையான சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ப்ளூ சட்டை மாறனை பொறுத்தவரை சினிமா குறித்த விஷயங்களை மிகவும் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு நபர் என்று கூறலாம்.

அந்த வகையில் ஏற்கனவே ஏ.ஆர் முருகதாஸ், கத்தி திரைப்படத்தின் கதையை காப்பி அடித்துதான் படமாகி இருந்தார் என்று பேசியிருந்தார். ப்ளூ சட்டை மாறன் இயக்குனர் கோபி நயனாரின் கதையை திருடிதான் கத்தி திரைப்படத்தை அவர் இயக்கினார் என்று பேசியிருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

கோபி நயனார் இயக்கிய அறம் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதேபோல கோபி நயனார் எடுக்க முயன்ற இன்னொரு திரைப்படத்தின் கதையை வைத்துதான் பா.ரஞ்சித், மெட்ராஸ் என்று படமாக்கினார் என்று புது தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் கோபி நயனார், கருப்பர் நகரம் என்கிற ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டு இருந்தார். அந்த படம் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஹவுசிங் போர்டு, அதில் உள்ள சுவர் அரசியல் மற்றும் ஃபுட்பால் தொடர்பான ஒரு படமாகும்.

அந்த திரைப்படத்தை அவர் இயக்க துவங்கிய பொழுதுதான் பா.ரஞ்சித் அட்டகத்தி திரைப்படத்தை இயக்கி வந்தார். ஆனால் கருப்பர் நகரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த அகில் என்பவரின் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக கருப்பர் நகரம் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

அட்டகத்தி முடிந்ததும் அதே கதையை அப்படியே எடுத்து பா ரஞ்சித் மெட்ராஸ் என்று படமாக்கினார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இது தற்சமயம் அதிக சர்ச்சையாக துவங்கி இருக்கிறது.