விஜய் செய்த தரமான சம்பவம்..! தமிழகமே அதிருது.. ! இதை யாரும் எதிர்பார்க்கல..! விஜய்க்கு நிஜமாவே துணிச்சல் தான்..!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியலில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் விஜய்:

உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்குபவராக இருகிறார்.

இந்த சமயத்தில் திடீரென அரசியலில் குதித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

அரசியல் வட்டாரங்களுக்கிடையே விஜய் அரசியலில் குதித்து இருப்பது பல விமர்சனத்தை ஏற்படுத்தினாலும் அவரது ரசிகர்கள் பலரும் அவரது அரசியல் வருகையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தற்போது விஜய் கோட் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இப்படியான நேரத்தில் அண்மையில் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

சிகப்பு மஞ்சள் என இரண்டு கலருடன் இந்த கொடி அறிமுகப்படுத்தியதோடு அதில் இரண்டு போர் யானைகள் பிளிரும் வகையில் உள்ளது.

தமிழக வெற்றிக் கழக கொடி:

மேலும் அதில் நடு மையத்தில் வாகைப்பூ அமைந்திருக்கிறது. இது அனைத்துமே சங்க கால தமிழர்களின் வீரத்தையும் அவர்களின் வெற்றி அடையாளத்தையும் காட்டுவதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் விஜய் கொடிக்கான விளக்கத்தை நான் மாநாட்டில் தெரிவிக்கிறேன் என அந்த கூட்டத்தில் பேசி இருந்தார்.

செப்டம்பர் முதல் வாரத்தில் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் கடைசி வாரத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துகிறார் நடிகர் விஜய்.

அதற்கு பிறகு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மண்டல மாநாடுகள் என்ற பெரிய மிகப்பெரிய திட்டமே வைத்திருக்கார் என தகவல்கள் கூறுகிறது.

விஜய் செய்த தரமான சம்பவம்..!

கட்சி கொடி அறிமுகம் செய்து வைத்ததிலிருந்து விஜய்யின் ரசிகர்கள் அதன் மீது அதிக ஆர்வத்தை செலுத்தி
மாநாட்டிற்கு செல்ல கட்சி கொடிகளை தயாரித்து வருகிறார்கள்.

பல முன்னணி அரசியல் தலைவர்களுக்களே தெரியாத பல விஷயங்களை விஜய் பார்த்து பார்த்து செய்வதை நினைத்து பார்த்தால் அனுபவம் மிக்கவர் கூட இப்படி செய்ய மாட்டார்கள் என தோன்ற வைக்கிறது.

கட்சிக்கொடியை மிகப்பெரிய மாநாடு நடத்தப் போகும் விஜய் அதில் நினைத்திருந்தால் அறிமுகப்படுத்தி இருக்கலாம்.

ஆனால் அங்கு அறிமுகப்படுத்தினால் அதோட வேல்யூ நிச்சயமாக இருக்காது. கட்சி கொடியை முன்னதாக அறிமுகப்படுத்திவிட்டால் தனது மாநாட்டிற்கு வரும் ரசிகர்கள் தொண்டர்கள் எல்லோரும் தனது வாகனங்கள் மற்றும் கைகளில் கொடிகளை ஏந்தி எப்படி ஆரவாரத்தோடு வந்து சேர்வார்கள் .

பிரமாண்ட மாநாடு எங்கு தெரியுமா?

அதுவே அவருக்கு மிகப்பெரிய பலமாகவும் அமையும். இதையெல்லாம் விஜய் முன்கூட்டியே திட்டமிட்டு செய்கிறார் என்பதை நினைத்தால் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் கூட அவரிடம் ஒன்றும் செய்ய முடியாது என தோன்ற வைக்கிறது.

அதைவிட ஒரு முக்கியமான விஷயம் தற்போது விஜய்யின் கட்சி கொடி அடங்கிய வேஷ்டி சட்டையை திருப்பூரில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வேஷ்டி சட்டைகள் தற்போது உருவாகி வருவதாக செய்யாறு பாலு இந்த பேட்டியில் கூறி இருந்தார்.

கட்சிக்கொடி அறிமுகம் செய்வதற்கு முன்னதாக இவர் நடிகர் விஜய் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் ஆசி பெற்று வந்தார் .
விஜய்க்கு நிஜமாவே துணிச்சல் தான்..!

இதனால் விஜய் தனது ரோல் மாடலாக விஜயகாந்த் மற்றும் எம்ஜிஆரை முன்வைத்து அரசியலில் இறங்குவதாக கூறப்படுகிறது.

விஜய் அரசியலுக்கு இறங்கும் சமயத்தில் அவருக்கு ஒன்னும் தெரியாது… பச்ச புள்ள… பால்வாடி குழந்தை இவரெல்லாம் ஒன்னும் சாதிக்க முடியாது என பலர் விமர்சித்தார்கள்.

ஆனால் இவரது முதல் அடியே பாயும் புலியாக மாறி இருக்கிறது. இனிமேதான் தரமான சம்பவமே நிகழப்போகிறது.

எனவே வருகிற 25ஆம் தேதி செப்டம்பர் மாதம் மிக பிரம்மாண்டமாக முழு அரசியல்வாதியாக விஜய் களத்தில் இறங்க உள்ளார்.

வருகிற செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி இந்த கட்சிக்கான மிக பிரம்மாண்டமான மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி எந்த இடத்தில் தான் இந்த பிரம்மாண்டமான மாநாடு மேடை நடைபெற இருக்கிறது.