பெரிய ஹீரோ பெயரை சொல்ல விரும்பல.. மக்களே டுபாக்கூர்னு நம்புறாங்க!! யோகி பாபு பேச்சு..

தமிழ் திரை உலகில் கவுண்டமணி, செந்தில் பிறகு வைகைப்புயல் வடிவேலு என்ற நிலை இருந்தது. தற்போது அவர்களைக் கடந்து யோகி பாபு காமெடி நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

குண சித்திர வேடத்திலும் நேர்த்தியான முறையில் நடித்து வரும் நடிகர் யோகி பாபு சமீபத்தில் போட் என்ற திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்று தந்தது.

பெரிய ஹீரோ பெயரை சொல்ல விரும்பல..

நடிகர் யோகி பாபுவை பொருத்தவரை 2009-ஆம் ஆண்டு யோகி என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து சிரித்தால் ரசிப்பேன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து 2010-இல் தில்லாலங்கடி, பையா படத்தில் நடித்த இவர் 2011 -இல் வேலாயுதம், தூங்கா நகரம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த வீரம், மான் கராத்தே, அரண்மனை, ஜெய்ஹிந்த், யாமிருக்க பயமே, காக்கா முட்டை, வேதாளம், முத்துன கத்திரிக்காய், குற்றமே தண்டனை, சத்ரியன், பலூன், படி ஏறும் பெருமாள் போன்ற படங்கள் இவருக்கு நல்ல வீட்டை கொடுத்தது.

அத்தோடு இவர் நடிப்பில் வெளி:வந்த கோலமாவு கோகிலா, படியேறும் பெருமாள் போன்றவற்றுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை விகடன் நிறுவனம் கொடுத்தது. மேலும் கோமாளி படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஜி சினி விருதினை வென்றிருக்கிறார்.

இந்நிலையில் போட் படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் பேசி வரக்கூடிய இவர் அண்மை பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி தேவையில்லாத செய்திகளை பகிர்ந்து தன்னை மாட்டி விட்டதாக சிலர் பேசி இருக்கிறார் என்ற செய்தியை வைத்திருக்கிறார்.

மேலும் அந்த பெரிய நடிகர் பிரபலம் யார் என்பதை தான் சொல்ல விரும்பவில்லை என்பதை உறுதிபட தெரிவித்து இருக்க கூடிய இவர் தனது ப்ரமோஷன் பேனரில் இவர்தான் லீட் ஆக்டர் என்று போட்டு சிலர் தன்னை கெடுக்க பார்ப்பதாக சொன்னார்.

மக்களே டுபாக்கூர்னு நம்புறாங்க..

மேலும் அப்படி யாரெல்லாம் நடந்து கொண்டார்களோ அவர்கள் தனக்கு போன் செய்து சாரி கேட்ட விஷயத்தை ஓபன் ஆக உடைத்து விட்டார்.

அத்தோடு சமீபத்தில் தன்னை தேவையில்லாத படி பேசுபவர்கள் பற்றி தான் யோசிப்பதில்லை என்றும் எனினும் ஒரு முறை இப்படி ஆகிவிட்டது என்று ஒரு விமர்சனகர் பேசி இருக்கிறார். அவர் பிரபலமானவர்கள் என்பதால் சொல்வதெல்லாம் உண்மை என்று மக்கள் நம்புகிறார்கள்.

எனினும் தற்போது மக்கள் அவர்களை டுபாக்கூர் என்று நம்புகிறார்கள். என்னைப் பற்றி பேசிய போது நான் கால் செய்து பேசினேன் எனக்கும் அந்த படத்திற்கும் சம்பந்தமே இல்லை எப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டேன்.

யோகி பாபு பேச்சு..

அதற்கு அவர்கள் அது இல்லை வேறு என்று மறைத்து பேசினார்கள். அதெல்லாம் தப்பு என் பிரச்சனைக்கு பேசுங்கள் என்று கூறினேன். மேலும் எந்த கம்பெனி என்பதை சொல்லுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்றேன். உடனே நான் சொன்னால் பிரச்சனையாகிவிடும் என்று சொன்னார்கள்.

அதுமட்டுமல்லாமல் அந்தப் படத்தின் இயக்குனரை நான் தான் அறிமுகம் செய்தேன் நான் 50 லட்சம் ரூபாய் குறைத்து நடித்து தருகிறேன் என்று சொன்னாங்க.

சரி என்று அவர்களுக்கு போன் செய்து கேட்டால் அப்படியெல்லாம் சொல்லவில்லை. ஒரு பெரிய ஹீரோ என் பக்கத்தில் இருக்கும் போது திரும்பவும் அவர்களுக்கு கால் செய்தேன். அந்த பெரிய ஹீரோ பெயரை நான் சொல்ல விரும்பவில்லை.

அத்தோடு நடக்காத ஒன்றை ஒரு வருமானம் வருவதற்காக இப்படி சொல்லலாமா? யாரையும் தயவு செய்து குறை சொல்லாதீங்க தப்பா பேசாதீங்க என நான் அந்த இடத்திலேயே சொல்லிவிட்டேன்.

அதுக்கு அவங்க என்ன கவனிக்க மாட்டேங்கறீங்க என்று பணம் கேட்டார்கள். பின் அவர்களிடம் பேசாதீர்கள் போனை கட் பண்ணுங்கள் என்று அந்த பெரிய ஹீரோ அட்வைஸ் செய்தார் என யோகி பாபு பரபரப்பாக பேசினார்.

இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.