தளபதி 70.. வெறும் 16 நாள் கால்ஷீட்.. அனல் பறக்கும் அரசியல் படம்.. கிடுகிடுக்கும் அரசியல் வட்டாரம்..!

தளபதி 70 : கோலிவுட் வட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு விஷயம் என்றால் அது நடிகர் விஜயின் 70-வது திரைப்படம் தான்.

ஏற்கனவே நடிகர் விஜய் தன்னுடைய 69ஆவது படத்துடன் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக்கொள்ள இருக்கிறார். தொடர்ந்து தீவிர அரசியலில் இயங்க இருக்கிறார் என்று நடிகர் விஜய் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் 70-வது படம் ஒன்றையும் நடிக்க இருக்கிறார். 16 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கும் நடிகர் விஜய் அந்த படத்திற்காக சம்பளம் எதையும் வாங்க போவதில்லை என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.

மேலும் தன்னை வைத்து படம் எடுத்து தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மற்றும் நலிந்த கலைஞர்களுக்காக இந்த படத்தின் வசூலை பயன்படுத்த இருக்கிறார் நடிகர் விஜய் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முழு நேர அரசியலில் ஈடுபட்டிருக்கும் ஈடுபட உள்ள நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு யோசனை வந்திருப்பது மிகவும் வரவேற்புக்குறியது.

இந்த தகவல் உண்மை என்றால் நடிகர் விஜய்க்கு இது மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது என்று விவரம் அறிந்து வட்டாரங்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் தன்னுடைய 70 வது படத்தில் தீவிர அரசியல் படமாக உருவாக்க இருக்கிறார் என்றும் அதிலும் கடந்த 25 ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த பிரச்சனைகள், அரசியல் வாதிகாளால் ஏற்பட்ட ஏமாற்று வேலைகள், ஊழல், எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள், என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் அக்கு வேறு ஆணிவேராக 3 மணி நேர திரைப்படமாக உருவாக்குவது என்ற முடிவில் இருக்கிறார் விஜய் என்று கூறுகிறார்கள்.

இந்த படத்தை மூன்று இயக்குனர்கள் இயக்க இருக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

நடிகர் விஜய் தன்னுடைய 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் இப்படியாக இந்த படத்தை ஒப்புக் கொண்டு இருக்கலாம். ஆனால் எந்த ஒரு சம்பளமும் வாங்காமல் படத்தின் வசூலை நலிந்த கலைஞர்களுக்கு பயன்படுத்தக் கூடிய நடிகர் விஜயின் இந்த முன்னெடுப்பு வரவேற்புக்குறியது என ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.