காவலர்கள் எல்லாம் சேர்ந்து என்னை .. முதல்வர்தான் காரணம்.. கண்ணீர் மல்க கூறிய நடிகை..

மலையாள சினிமாவில் நடந்த பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுதான் தற்சமயம் சினிமாவில் பெரிய அலையை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறலாம்.

பொதுவாக சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் உண்டு என்று தெரிந்தாலும் அது ஏதோ ஒரு சில நடிகைகளுக்கு நடக்கிறது என்பதுதான் பலருது பார்வையாக இருந்து வந்தது. ஆனால் அது சினிமா முழுக்கவே அதிகமாக இருக்கிறது என்பது இந்த ஹேமா கமிட்டி வந்த பிறகுதான் தெரிந்திருக்கிறது.

காவலர்கள் எல்லாம் சேர்ந்து

கேரளாவில் பிரபல நடிகை ஒருவருக்கு பாலியல் பலாத்காரம் நடந்ததை அடுத்து அதன் பின்புலமாக யார் இருக்கிறார் என்று பார்த்த பொழுது மலையாள நடிகர் ஒருவர் இருப்பது தெரிந்தது. இதனை அடுத்து கேரளா அரசு சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து அறிவதற்காக ஹேமா கமிட்டியை அமைத்தது.

இந்த நிலையில் ஆய்வுகளை மேற்கொண்ட ஹேமா கமிட்டி தற்சமயம் உருவாக்கி இருக்கும் அறிக்கைதான் பல மலையாள பிரபலங்களுக்கும் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் மற்ற மொழியில் இருக்கும் நடிகைகளும் கூட ஹேமா கமிட்டி வரவேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.

முதல்வர்தான் காரணம்

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் நடிகை காதம்பரி ஜெத்வானிக்கு நடந்த சம்பவங்கள் கூட பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களில் பேசிய ஜெத்வானி பல அதிர்ச்சி தகவல்களை கூறி இருக்கிறார்.

தற்சமயம் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காதம்பரி ஜெத்வானி பல வருடங்களாகவே தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் ஆவார்.  பல மொழிகளிலும் இவர் படங்களில் நடித்திருக்கிறார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியைச் சேர்ந்த குக்கலா வித்யாசாகர் என்பவர் அளித்த பொய் புகார் தொடர்பான விசாரணையின் காரணமாக தனக்கு நேர்ந்த அநீதியை அவர் கூறியிருக்கிறார்.

கண்ணீர் மல்க கூறிய நடிகை

அதில் அவர் கூறும்பொழுது அந்த புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள எனது வீட்டிற்கு காவல் துறையினர் வந்தார்கள். வந்தவர்கள் என்னை கடத்திச் சென்று ஆந்திராவில் உள்ள ஒரு அரசினர் மாளிகையில் பதுக்கி வைத்து சித்தரவதை செய்து வந்தனர்.

மேலும் காவல்துறை அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து என்னை பலாத்காரம் செய்தனர். அதில் சில உயர் அதிகாரிகளும் இருக்கின்றனர். பிறகு என்னை சிறையிலும் அடைத்தனர். எனது பெற்றோர்களையும் அவர்கள் தொந்தரவு செய்தனர். இதனால் எனது அப்பாவிற்கு தற்சமயம் காது கேட்கும் திறனே இல்லாமல் போய்விட்டது.

இப்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் நான் துணிச்சலுடன் இந்த விஷயத்தை கூறுகிறேன். இப்போது இருக்கும் அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறி இருக்கிறார் நடிகை காதம்பரி ஜெத்வானி.