ஜெயம் ரவி திடீர் முடிவுக்கு காரணம்.. ஒரு வாரம் கதறி அழுது.. நாயை விட கேவலமான கொடுமை.. ஆர்த்தியின் கொடூர புத்தி..

கடந்த சில நாட்களாக நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த தகவல்கள் தான் இணைய பக்கங்களில் வியாபித்து இருக்கின்றன.

பல்வேறு பிரபலங்கள் இந்த விவாகரத்து குறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல மருத்துவர் காந்தராஜ் அவர்கள் தன்னுடைய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்..

இந்த பேட்டியில் தொகுப்பாளினி ஜெயம் ரவி விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பிய பொழுது.. ஜெயம் ரவி மட்டும் தான் விவாகரத்து செய்து இருக்கிறாரா…? ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 11 மணி ஆகிவிட்டது என்றால் இந்தியா முழுவதும்… ஏன் உலகம் முழுதும் இருக்கக்கூடிய நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அவற்றைப் பற்றி எல்லாம் நாம் யாராவது பேசினோமா..? ஜெயம் ரவி விவாகரத்தை பற்றி மட்டும் நாம் ஏன் பேச வேண்டும்..? அவர் ஒரு பிரபலம் என்பதால் சினிமா விரும்பிகள் இதனைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.. இது உங்களுக்கு ஒரு வியாபாரமாக மாறிவிட்டது.

ஜெயம் ரவி விவாகரத்து செய்ததால்.. காய்கறி விலை குறைந்து விட்டதா…? அல்லது பெட்ரோல் விலை ஏறி விட்டதா..? மக்களை இது எந்த வகையில் பாதிக்கிறது.. என்று இதனை நான் விவாதிக்க வேண்டும்.

ஜெயம் ரவியை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதற்காக நான் ஏன் அழ வேண்டும்..? அதற்காக சினிமா நடிகர்களை கண்டு கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை. நடிகர் திலகம் சிவாஜி இறந்த போது ஒரு வாரம் நான் அழுதேன்.

சிறு வயதிலிருந்து அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன் அவருடைய கருத்துக்களை கேட்டு வளர்ந்தவன் அவர் மறைந்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரம் கதறி அழுதேன். தற்போது அதே விஷயத்திற்காக அதே போல அழுவேனா..? என்று கேட்டால்.. சத்தியமாக கிடையாது.

அந்த நேரத்தில் அந்த விஷயம்எனக்கு சோகமாக இருந்தது அழுதேன். அதேபோலத்தான் ஜெயம் ரவி விவாகரத்தும் பத்து நாளைக்கு பரபரப்பாக இருக்கும் அடுத்து வேறு விஷயத்தை நோக்கி சென்று விடுவார்கள்.

இதையெல்லாம் விவாதிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என கூறினார். தொடர்ந்து பேசிய தொகுப்பாளனி, நடிகர் ஜெயம் ரவிக்கு பல கொடுமைகள் நடந்திருக்கின்றன.

குறிப்பாக அவருடைய மனைவி ஆர்த்தி படப்பிடிப்பு தளங்களுக்கு குறிப்பாக வெளிநாடுகளுக்கு அல்லது வெளியூர்களுக்கு படப்பிடிப்பு என்று ஜெயம் ரவி சென்று விட்டால் அந்த படத்தின் இயக்குனருக்கு போன் செய்து படப்பிடிப்பு எத்தனை மணிக்கு முடிந்தது ஜெயம் ரவி இப்போது எங்கே இருக்கிறார் தனியாக தங்கி இருக்கிறாரா உடன் யாரேனும் தங்கி இருக்கிறார்களா என்று கேட்பார் என்று கூறுகிறார்கள்.

மட்டுமில்லாமல் ஜெயம் ரவியின் மேக்கப் மேனனுக்கு போன் போட்டு அவர் என்ன செய்கிறார் யாருடன் இருக்கிறார் என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும், நட்ட நடு ராத்திரியில் ஜெயம் ரவியின் அறையின் கதையை கதவைத் தட்டி உடன் யாராவது இருக்கிறார்களா..? என்று சோதித்து இருக்கிறார்.

இதெல்லாம் ஒரு நடிகருக்கு நடக்கக்கூடிய உட்சபட்ச கொடுமை.. நாயை விட கேவலமான ஒரு நிலையில் ஜெயம் ரவியை நடத்தி இருக்கிறார்கள் என கூறுகிறார்கள். பிறகு ஏன் தன்னுடைய கணவரை நடிக்க அனுப்ப வேண்டும் என்று தொகுபாளினி கேள்வி கேட்கிறார்.

இதற்கு பதில் அளித்த மருத்துவர் காந்தராஜ் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமல்ல திருமணமான ஆண் பெண் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்கு எப்போதுமே சந்தேகம் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள். எப்படி கடந்து செல்கிறார்கள் என்பது தான் அவர்கள் வாழ்க்கை தொடர்ந்து நடப்பதும் அல்லது முடிந்து போவதும்.

எல்லோருக்கும் இருக்கும் சந்தேகம் தான். ஜெயம் ரவியின் மனைவிக்கும் இருந்திருக்கிறது. இதில் என்ன புதிதாக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்..? என்று கூறினார் மருத்துவர் காந்தராஜ்.

தொடர்ந்து பேசிய அவரிடம் எனக்கு தெரிந்தவரை ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் வெற்றி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவியின் அம்மா அதாவது ஜெயம் ரவி அவர்களின் மாமியார் அவருடைய திரை வாழ்க்கையில் தலையிட ஆரம்பித்த பிறகு அவருக்கு பல தோல்வி படங்கள் அமைந்தன. வந்த இடம் போன தடம் தெரியாத அளவுக்கான திரைப்படங்கள் எல்லாம் ஜெயம் ரவியின் திரை பயணத்தில் இருக்கிறது.

இதற்கு காரணம் ஜெயம் ரவி அவர்களின் மாமியாரோட தலையீடு தான் என்று கூறுகிறார்களே..? என்று தொகுப்பு கேள்வி எழுப்பியதற்கு எல்லோருக்குமே எல்லா குடும்பத்திலுமே இப்படியான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும்.

இதனை பெரிதாக நாம் விவாதிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஜெயம் ரவி ஒரு நடிகர் என்பதால் அதனை பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்களே.. தவிர இது குறித்து நாம் மேற்கொண்டு அதுவும் ஆராய தேவை இல்லை என பேசி இருக்கிறார் மருத்துவர் காந்தராஜ்.